கோவில்பட்டியில் தென்மண்டல ஏர்கண்டிசனர், ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன் சங்க மாநாடு
கோவில்பட்டியில் ஏர்கண்டிசனர் ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன் சங்கம் சார்பில் 8 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 2வது தென் மண்டல மாநாடு மந்தித்தோப்பு சாலை தங்க மகாலில் நடைபெற்றது.
சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் முனீஸ்வரன் வரவேற்று பேசினார்., முன்னாள் தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்,
மாநாட்டில் சங்க உறுப்பினர்களுக்கு புதிய வகை இன்வெட்டர் ஏ.சி. தொழில் நுட்பத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் புதிய மாடல் பொருள்களை காட்சிப்படுத்தி பயிற்சியும் வழங்கினர்.
தொடர்ந்து மாநாட்டில் தொழிலாளர்களை புதிய தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தமிழக அரசு விற்பனை திறனை ஊக்குவிப்பதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் தொழில்நுட்பத் திறன்களை ஊக்குவித்து தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை ஒரு மனதாக நிறைவேற்றினர்.
மாநாட்டில் சங்கத்தின் துணைத் தலைவர் சரவணன், துணை செயலாளர் மாரியப்பன், பொருளாளர் முத்துக்குமார், துணைப் பொருளாளர் காளிப்பாண்டி, தூத்துக்குடி செல்வகணபதி, நெல்லை ரவி, தட்சிணாமூர்த்தி, உடன்குடி சௌந்தர், விருதுநகர் சீனிவாசகன், திருச்செந்தூர் ஜெயக்குமார், திருநெல்வேலி சாகுல்ஹமீது, ஏரல் ஜெய பிரகாஷ், அருப்புக்கோட்டை சரவணன், காரைக்குடி ஜெயபிரகாஷ், ராஜபாளையம் அபுதாகீர், உட்பட ஏராளமான தென் மண்டலங்களைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.