• February 7, 2025

Month: December 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி சிறுவன் சாவில் திடீர் திருப்பம்; கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர் கைது

கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன் – பாலசுந்தரி தம்பதியின் இளையமகன் கருப்பசாமி(வயது 10) அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 9-ந்தேதி கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென மாயமானான். இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி மறுநாள் […]

சினிமா

கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன்; அல்லு அர்ஜுன் உறுதி

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ந் தேதி இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. அதனை காண அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா  உள்பட பலரும் சந்தியா திரையரங்கிற்கு சென்றனர். அப்போது நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் திரையரங்கில் கூடினர். இதனால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் படம் […]

செய்திகள்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சர் ஆறுதல் செலுத்தினார். மேலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் […]

செய்திகள்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ம் தேதி  சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் இன்று மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று (14.12.2024) காலை 10:12 […]

செய்திகள்

கொட்டிய மழையில் கழுகுமலை கோவிலில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் பலர் கோவிலில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.இதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு கோவிலில் நாரண தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு 9.30 மணி அளவில் மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளி காட்சி அளித்தார். இரவு 10 மணி […]

பொது தகவல்கள்

ஆஹா… சமையல்….!

குட்டீசுக்கு பிடிச்ச மாதிரி சிக்கன் பிரை  தேவையான பொருட்கள்: சிக்கன் 1/2 கிலோ , காஷ்மீர் சில்லி பொடி – ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி.மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி. தயிர் இரண்டு மேசைக்கரண்டி. மிளகுத்தூள் அரை தேக்கரண்டி. செய்முறை: சிக்கனுடன் மேலே உள்ள மசாலாக்களை பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு கடாயில் தேங்காய் எண்ணெயில் இரண்டு மேசைக்கரண்டி சேர்த்து வறுத்து எடுத்தால் குழந்தைகள் […]

தூத்துக்குடி

மழைவெள்ளத்தினால் சாலையில் பாதிப்பு: போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்ட பகுதிகள் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக மழை வெள்ளத்தால் சாலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. *தூத்துக்குடி மகிலாபுரம் – கீழசெக்காரக்குடிக்கு செல்லும் சாலை மற்றும் சொக்கலிங்கபுரம் -கீழசெக்காரக்குடிக்கு செல்லும் சாலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கு மாற்றாக பொட்டலூரணி வழியாக கீழச்சக்காரக்குடிக்கு செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முறப்பநாடு ஆத்துப்பாலம் வழியாக அகரம் கிராம பகுதிக்கு செல்லும் சாலையில் பாதிப்பு […]

பொது தகவல்கள்

மூல நோய்க்கு மாதுளை சாறு மிக சிறந்த மருந்து

மாதுளை ஜூஸில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது பல மோசமான மற்றும் அபாயகரமான நோய்களையும் தடுக்கும். மூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையலாம். உலர்ந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜி.வி.என்.கலைக்கல்லூரியில் கேம்பிரிட்ஜ்ஆங்கிலமொழித்திறன் விழிப்புணர்வுநிகழ்ச்சி       

கோவில்பட்டியில் ஜி. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் ஆங்கிலத் துறை, சார்பில் கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழித் திறன் சான்றிதழ்கள் குறித்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியில் தாமோதரன் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம், கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழித் திறன் சான்றிதழ்களின் பயன்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது மற்றும் தங்கள் தொழில்நுட்பத்திறனை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உதவுவது ஆகும். ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர். எஸ்.டி. செல்வசுந்தரி,  வரவேற்புரையுடன் நிகழச்சி தொடங்கியது. டாக்டர். எஸ்.டி. செல்வசுந்தரி தனது […]