தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-சிஐடியு சார்பில் என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல்மின் நிலையம் முன்பு பிப்ரவரி (13)ந் தேதி முதல் என் டி பி எல் திட்ட செயலாளர் அப்பாதுரை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இன்று5 வது நாளாக நடைபெற்று வருகிறது. என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிறுவனத்தின் நிரந்தர ஊழியராக அறிவித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து […]
மகா சிவராத்திரி நாளில் சிவனின் அருளை பெறுவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு விரதத்தை கடைபிடிக்க வேண்டும். உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு அளிக்க வேண்டும். செய்யக் கூடாதவைகள் என சில விஷயங்கள் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளை மீறுவது பாவங்களை சேர்க்கும். அப்படி மகா சிவராத்திரி நாளில் நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். மனதை முழுவதுமாக இறைவனிடம் ஒன்றி இருக்க செய்வதும், நமக்குள் இறைத்தன்மையை உணரச் செய்வதுமே விரதங்களின் நோக்கமாகும். இந்துக்களால் பல விரதங்கள் […]
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூரை சேர்ந்த பஸ்கள், அலுவலக நேரங்களில் நகரத்திற்குள் வரும்போது போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடிய காரணத்தினால், மாற்றுவழியாக பெருங்களத்தூர்- மதுரவாயல் பைபாஸ் வழியாக கோயம்பேடு வந்து சேருகிறது. இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழகமானது பிற மாநிலங்களில் இருந்து கோயம்பேடு வரும் அரசு பஸ்கள் தாம்பரம் வழியாக செல்லலாம் என்ற உத்தரவினை பிறப்பித்து உள்ளது. இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் தாம்பரம் வழியாக செல்லும். குறிப்பாக சென்னை […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லம நாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புனித வனத்து அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல், மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 500 மாடுகள் களமிறக்கப்பட்டு உள்ளதுடன், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளை களை அடக்கி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி காயம் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 16 பேர் காயமடைந்து […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கதிரவன். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் முதுகலை வேளாண்மை பட்டதாரி. இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை மாவட்ட ஆட்சியராக தருமபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். சுனாமியின்போது சிறப்பு துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்கள் நலத்திட்டங்கள் பெற உதவினார். பின்னர் 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற […]
ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் தி.மு.க.வினரின் விதிமீறல்கள்; தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய் வதாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளார். இது வரை தி.மு.க. சார்பில் ரூ.35.64 கோடியை செலவழித்துள்ளதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு த�ொகுதி இடைத்தேர்தல்வருகிற27– ஆம் தேதிநடைபெறுகிறது. ஏற்கனவே ஒருமுறை இந்த தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட் டது. போலி வாக்காளர் களை […]
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த குவாரிகள் மூலம் 10 வீல் முதல் 20 வீல் டாரஸ் லாரிகள் வரையில் பாறைகளை வெட்டி எடுத்து டாரஸ் லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். மேலும் இவ்வகையான லாரிகள் ஆலங்குளம் முதல் கடையம் வரை உள்ள பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த லாரிகள் அதிக எடை உள்ள கனிம வளங்களை எடுத்து வருவதால் கீழ கடையம் ரெயில்வே சாலை மிக மோசமான […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை ) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையமும், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம். கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் […]
தூத்துக்குடி அனல்மின்நிலைய தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி.கடிதம்
மத்திய நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோதி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோருக்கு கனிமொழி எம்.பி.அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:- எனது தூத்துக்குடி தொகுதியில் உள்ள என்டிபிஎல் அனல்மின்நிலைய தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் மின் நிலையத்தில் 91 நிரந்தர ஊழியர்கள் உட்பட 1500 பேர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். என்எல்சி அனல் மின் […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்நகர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புதுப்பட்டி கிராமத்தில் கிணற்று பாசனத்தை வைத்தே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள இடத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்தது. இதில், ஆனையப்பப்புரத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் ஆகியோர் அங்கு கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணறு தோண்டுவதற்காக வெடி வைத்துள்ளனர். இதில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் அப்பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் […]