கோவில்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில், மெயின் ரோட்டில் உள்ளது. நீர்வரத்து ஓடையின் மறு பக்கத்தில் இக்கோவில் இருக்கிறது, சமீபத்தில் இக்கோவிலுக்கு செல்லும் நடை மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது, தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட்டனர், கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது பற்றி எடுத்து கூறினார்கள்/ இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு நீர்வரத்து ஓடையில் தற்காலிக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செல்வ விநாயகர், […]
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் பெண் […]
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். நடிகை ஜமுனா தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார். மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை […]
கோவில்பட்டி வேலாயுதபுரம குழந்தைகள் நல மையத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சங்கர், துர்கேஷ், நளினி,விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசாபேகம், மேற்பார்வையாளர்கள் விஜயா ராணி, பாலம்மாள், முத்துமாரி ஆகியோர் பேசினார்கள். குடியரசுதினத்தை முன்னிட்டு மாறுவேடப்போட்டியில் பங்கேற்ற சிறுவர் சிறுமிகளுக்கு நற்பணி மன்றத்தின் மாவட்ட துணை தலைவர் கவுன்சிலர் தவமணி பரிசு […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது, பள்ளி தலைமை ஆசிரியை ராஜ சரஸ்வதி தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார், அதைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி, மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் பரிசுகள் வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், நாராயணசாமி, முத்துச்செல்வம்,மாரியப்பன், பூல் பாண்டியன், பிரபாகரன், கிருஷ்ணசாமி, வீராசாமி, […]
கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தை நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டில் ரூ.6.87 கோடி செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் இங்குள்ள கடைகளை காலி செய்து தரும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. மேலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது, இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் ராஜாராம், […]
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. \\\ ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. . ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். விழா காலை 8 மணிக்கு தொடங்கியது.. அணிவகுப்பு, கடமையின் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்லும். […]
சென்னை மெரினாவில் குடியரசுதின கொண்டாட்டம்: கவர்னர் தேசிய கொடியேற்றினார்;அண்ணா பதக்கங்களை முதல்- அமைச்சர்
நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். பின்னர், 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை […]
நாட்டின் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊழியர்கள், அலுவலகர்கள் திரண்டு இருந்தனர். காலையில் நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தேசிய கொடியேற்றினார். அதை தொடர்ந்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். நகராட்சி பொறியாளர் பி. கே. ரமேஷ், உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், காஜா நஜிமுதீன், வள்ளி ராஜ், வருவாய் அலுவலர் ரமேஷ் குமார், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் […]
கோவில்பட்டியில் குடிநீர் பிரச்சினை :நகராட்சி பொறியாளரை காருடன் சிறைபிடித்து மக்கள் போராட்டம்
கோவில்பட்டி நகராட்சி 5வது வார்டு வேலாயுதபுரத்தில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை என்று அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து நகராட்சி பொறியாளர் ரமேஷ், வேலாயுதபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துள்ளார். 2வது குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை, குறைவாக வருவதாகவும், எனவே முதல் குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் லலராஜா மற்றும் பொது மக்கள் […]







