• May 20, 2024

Month: January 2023

செய்திகள்

டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து 4 கட்ட போராட்டம் ; வணிகர் சங்கங்களின்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுசெயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் அனைத்து மண்டல தலைவர் ஆட்சிமன்றகுழு நிர்வாகிகள் மற்றும் சென்னை-காஞ்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.’ இக்கூட்டத்தில் தற்போது வணிகவரித்துறை மேற்கொண்டு வரும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு […]

கோவில்பட்டி

பார்வையற்றோருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரப்படும்; ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

கோவில்பட்டியில் உள்ள உலகின் ஒளி பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில் உலக மாற்றுதிறனாளிகள் தினம் மற்றும் லூயி பிரைலி பிறந்ததினத்தையொட்டி பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:- லூயி பிரைலி கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான பிரைலி எழுத்து முறையினால் தான் பார்வையற்றவர்கள் வாழக்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். லூயி பிரைலி பார்வையற்றவர்கள் முன்னேற்றத்துக்கு உதவியது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பார்வையற்றவர்களுக்கு பல நலத்திட்ட […]

செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.திருமகன் ஈவெரா மரணம்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா(. இவர் இன்று பகலில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார், அவருக்கு வயது 46 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, என்பது குறிபிடத்தக்கது. திருமகன் ஈ.வெ.ரா, மரணம் அறிந்து பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால் அதிகாரிகள் சிறைக்கு

கோவில்பட்டி மெயின்ரோட்டில் சாந்தி மெடிக்கல் அருகே ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடையானது, 2 ஆண்டுக்கு முன்பு சாலை அகலப்படுத்தப்படும் போது அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ்  ரூ.9 லட்சம் செலவில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர […]

தூத்துக்குடி

இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண், வாகனம் மோதி பலி

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தியாகராஜா நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மனைவி சந்தனமாரி (வயது 30), இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை எப்போதும்வென்றான் பாலம் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் சந்தனமாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.  இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா […]

செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு 9-முதல் 13-ந்தேதி வரை வழங்கப்படும்-அமைச்சர் சக்கரபாணி

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி  ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்கள் முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் […]

செய்திகள்

பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; போலீஸ் தடியடி

வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவையொட்டி பண்பாட்டு கழகம் சார்பில் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து தேவராட்டம் ஆடிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஊர்வலத்தில் சென்ற வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு திரிந்ததால் கோவை ரோடு, ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மனோகரா கார்னரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை எனவும், […]

செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், கார் விபத்தில் பலியான பரிதாபம்

மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மகன் விஜயராகவன் (வயது 41). இவரது மனைவி வத்சலா (36). இந்த தம்பதிக்கு விஷ்ணு (9), அதீர்த் (6) ஆகிய 2 மகன்கள் இ்ருந்தனர். விஜயராகவனும், வத்சலாவும் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் நங்கநல்லூர் இந்து காலனியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்தலட்சுமியும் (60) இருந்தார். இவர்கள் 5 பேரும் கேரளாவில் உள்ள […]

தூத்துக்குடி

ஊர்க்காவல் படைக்கு தேர்வான 39 பேருக்கு பணிநியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு கடந்த 14.12.2022 அன்று ஆள்சேர்ப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, 21.12.2022 அன்று தேர்வு நடைபெற்றது. அதில் ஊர்க்காவல்படை,க்கு தேர்வான 39 பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கு  இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பணி நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கினார். அப்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தார்.

கோவில்பட்டி

கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் நிரந்தர பணியாளர் ஆக்கப்படவேண்டும்; கடம்பூர் ராஜு

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விளாத்திகுளத்தில் நிருபர்களுக்கு அளித்த பெட்டியின் போது கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள் அவர்கள் பணி என்பது தலையாய மகத்துவமான பணி கொரோனா காலகட்டத்தில் தங்கள் இன்னுயரையும் கருதாமல் […]