• May 20, 2024

Month: December 2022

செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன. அதாவது பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் பொருளாதார வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.12 ஆயிரமும், கோவாவுக்கு ரூ.15 ஆயிரத்து 700-ம், மங்களூருவுக்கு ரூ.11 ஆயிரத்து 200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சாதாரண நாட்களை விட தற்போது விமான கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். மற்ற நாட்களில் பெங்களூருவில் இருந்து […]

செய்திகள்

கர்நாடகத்தில் முககவசம் மீண்டும் கட்டாயம்; கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் […]

செய்திகள்

கடும் பனிப்பொழிவு : டெல்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை

, டெல்லியில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. அதிகாலைப்பொழுதில் எதிரில் வரும் ஆட்களை மறைக்கும் அளவுக்கு கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை டெல்லி கல்வி இயக்குனரகம் நேற்று மாலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு […]

தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி

கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் அருகேயுள்ள சம்பகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் திருச்செந்தூருக்கு காரில் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு  இரும்பினார்கள்.’ இவர்கள் வந்த கார் முள்ளக்காடு  பழையகாயல் இடையே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்து, காரை ஓட்டி வந்த பால்முத்து பிரபு (39), மற்றும் கந்தையா மனைவி தமிழ்செல்வி (69) ஆகிய 2பேரும் சம்பவ இடத்திலேயே […]

தூத்துக்குடி

காவல்துறையில் 538 பேருக்கு கலந்தாய்வின் மூலம் பொதுமாறுதல்; கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு இரண்டாம் கட்டமாக நேற்று (22.12.2022) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பொதுமாறுதல் வழங்கினார். கடந்த 19.12.2022 அன்று முதற்கட்டமாக 271 காவல்துறையினருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து நேற்று  தூத்துக்குடி ஊரகம், கோவில்பட்டி, மணியாச்சி, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் நிலையங்கள் […]

செய்திகள்

ஓ. பன்னீர்செல்வத்துக்கு டி. ஜெயக்குமார் சவால் ; ஓ.பி.எஸ்.முன்னேற்றக் கழகம் என்று ஆரம்பித்து

சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு :- கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் துணிவிருந்தால் எடப்பாடி கே.பழனிசாமி தனிக் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாரேபதில் : முதலில் அந்த கூட்டத்தை ஒரு நிறுவனத்தின் கூட்டமாகத்தான் பார்க்க முடியும். அதனைக் கட்சியின் கூட்டமாகப் பார்க்க முடியாது. பண்ருட்டியார் பண்பாகப் பேசுபவர்.எப்படி ஒருமையில் பேசினார் என்று தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவரும் […]

கோவில்பட்டி

மழையின்மையால் மக்காசோளம் மகசூல் பாதிப்பு ; விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. சாரல் மழை பயிர் விளைச்சலுக்கு போதுமானதாக இல்லை.இதனால் இப்பகுதிகளில் பயிரிப்பாட்டுள்ள மக்காச்சோளம் பருவமழை குறைவினாலும், படைப்புழு தாக்கத்தினாலும் மணிபிடிக்காமல் மக்காச்சோளம் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, உளுந்து, பாசி போன்ற பயறு வகை பயிர்களும் மழையின்மையால் பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் இல்லாத காரணத்தால் மஞ்சள் நோய் தாக்கியதோடு, நிலத்தில் ஈரம் இல்லாததால் பயிர்கள் காய்ந்துவிட்டு மகசூல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி போராட்டம் :சமாதான கூட்டத்தில்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆகம விதிகளை கடை பிடிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புதிய மின் கம்பங்கள் அமைத்தல், கோவில் மைதானத்தில் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுதல், அரசியல் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தல், சேதம் அடைந்த சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மராமத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் முன்பு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமையில் […]

செய்திகள்

தமிழறிஞர்கள் 38 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருது; மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், படெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடி

மும்பை-மதுரை ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்; மத்திய மந்திரியிடம் கனிமொழி கோரிக்கை

டெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரி  அஸ்வினி வைஷ்னவை  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள பல்வேறு ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். மும்பையிலிருந்து மதுரை வரையிலான ‘லோக்மான்ய திலக் விரைவு ரெயிலை ’ தூத்துக்குடி வரை நீட்டிப்பது, மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையிலான புதிய சேவை, முன்பு அறிவித்திருந்த தாம்பரம் – செங்கோட்டை இடையிலான வாரம் மூன்று ரெயில்கள், ராமேஸ்வரம் – மங்களூர் இடையே புதிய […]