தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: 517 பேருக்கு பணி நியமன ஆணைகளை கீதா ஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ஒருங்கிணைத்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது,’
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார். பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்திருந்தவர்கள், தங்கள் நிறுவனங்களுக்குரிய பணியாட்களை நேர்காணல் மூலம் தேர்வுசெய்தார்கள்.
முகாமில் 118 நிறுவனங்கள் மற்றும் 12 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் , 2374 வேலை நாடுநர்கள் முகாமுக்கு வந்து இருந்தனர். இவர்களில் பெண்கள் 1168 பேர். 213 ஆண்கள் 137 பெண்கள் என மொத்தம் 350 பேர் இரண்டாம்கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 33 பேர் திறன் பயிற்சி தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 517 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு பணியாட்கள் தேர்வு செய்யப்பட்டனர், இதில் பெண்கள் 207 பேர் பெண்கள். 310 பேர் ஆண்கள் ஆவர். இதை தொடர்ந்து அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி பேசினார்.
நிகழச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, , திட்ட இயக்குனர் (மகளிர்) மல்லிகா, கல்லூரி கல்வி திருநெல்வேலி மண்டல இணை இயக்குனர் ரவீந்திரன், மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சண்முகசுந்தர், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது உள்ளிட்டோர்.கலந்து கொண்டனர்.
