தூத்துக்குடியில் 22 ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது தூத்துக்குடி மில்லர்புரம் வ.உ.சி.கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.,
*100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள்
* 5,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
*வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
*இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
கல்வித்தகுதிகள்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை / ஐ.டி.ஐ. / டிப்ளமோ / நர்சிங் / பார்மசி பொறியியல் பட்டப் படிப்பு வயது வரம்பு 18-40 வயது வரை
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலை நாடுநர்கள் Google Link-ல் https://forms.gle/pEyqpjfqqhshrH616 லிங்க் ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளவும்.
விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிபர குறிப்புகளுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு : 0461-2340159 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்,
மேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.
