Month: December 2024

தூத்துக்குடி

சிறுதானிய சாகுபடிக்கு விவசாயிகளுக்கு மானியம்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்

சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- : தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானியங்களின் உற்பத்தி, பரப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்பொருட்டு தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்வதற்காக உழவு மேற்கொள்ள மானியமாக அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 40 சதவீதம் அல்லது ரூ.5400 பின்னேற்பு மானியமாக […]

பொது தகவல்கள்

முக்கிய நாட்டு மாடு இனங்கள்

மதுரை, விருதுநகர், சிவகங்கை- புலிக்குளம் மாடு நெல்லை,- தென்பாண்டி நாடன் மாடு தூத்துக்குடி தேனி, கம்பம் – கம்பம் மலைமாடு கொங்கு-காங்கேயம் மாடு  அந்தியூர்  மலை, ஈரோடு- பர்கூர் செம்மரை மாடு காவிரி டெல்டா- உம்பளாச்சேரி மாடு தர்மபுரி, ஒசூர்- துருஞ்சல மாடு காஞ்சீபுரம்,திருவண்ணாமலை –குட்டை மாடு சேலம்- பாலமலை மாடு மேட்டூர்- ஆலம்பாடி மாடு

பொது தகவல்கள்

மாட்டு சாணத்தை விரும்பி வாங்கும் நாடுகள்

மாடுகளின் சாணத்தின் மதிப்பை உணர்ந்த வெளிநாட்டினர் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிட விரும்புகின்றனர்.அப்படி என்ன  மாட்டுச்சாணத்தில் இருக்கிறது என்றால் நீங்க ஆச்சரியப்படுவீர்கள். மாட்டுசாணத்தில் கால்சியம் , பொட்டாசியம், செல்லுலோஸ் நைட்டிஜன் மற்றும் பல நுண் வேதிபொருட்கள் மட்டுமல்லாது பல நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் ஏராளமாக உ‌ள்ளன. மாட்டு சாணம் இருந்தாலே அந்த வாடைக்கு ஏகப்பட்ட மண்புழுக்கள்  ஓடி வரும். நம்முடைய முன்னோர்கள் காலம்காலமாக மாட்டு சாணத்தை யும் கால்நடைகளின் கழிவுகளையும் தான் நிலத்தில் இட்டு வந்தனர் அப்போது எல்லாம் […]

செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடத்துக்கு நல்லக்கண்ணு பெயர்; முதல்-அமைச்சர்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது . இன்று அவரது நூறாவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, […]

கோவில்பட்டி

வேலுநாச்சியார் உருவ மாஸ்க் அணிந்த ஓவிய பள்ளி மாணவர்கள்  

கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டையராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் கடைப்பிடிக்கபப்ட்டது. இதையொட்டி பெண்களுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் வீரமங்கை வேலுநாச்சியார் உருவ மாஸ்க் அணிந்து வீரமங்கையின் புகழை உலகிற்கு பறைசாற்றவும்,பெண்களுக்கு எதிரான அனைத்து செயல்களையும் தடுத்து நிறுத்தவும், நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். […]

சினிமா

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாவதை போ , ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:_ *பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் சொர்க்கவாசல். இந்த படத்தை ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மத்திய சிறைச்சாலையை […]

சினிமா

விடாமுயற்சி’ டப்பிங் பணிகள் நிறைவு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற விடாமுயற்சி […]

சினிமா

‘100 படங்களை கடந்துவிட்டேன், ‘ – இயக்குனர் போஸ் வெங்கட்

மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம்தூம், சிங்கம், ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விமல் நடிப்பில் ‘சார்’ படத்தை இயக்கி இருந்தார். கல்வியின் அவசியத்தையும் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இப்படம் பேசியுள்ளது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான போஸ் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் எலும்புமுறிவு, தோல்நோய், பொது மருத்துவம் இலவச சிகிச்சை முகாம்; முன்பதிவு செய்து

கோவில்பட்டி ஜி ஸ்டார் மருத்துவமனை நடத்தும் எலும்புமுறிவு, தோல் நோய், பொது மருத்துவம் இலவச சிகிச்சை முகாம் நாளை மறுநாள் 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. மெயின்ரோட்டில் லட்சுமி மில் குவார்ட்டர்ஸ் எதிர்புறம் ஜெகஜோதி காம்ப்ளக்சில் உள்ள ஜி ஸ்டார் மருத்துவமனையில் நடக்கும் இந்த முகாமில் எலும்பு முறிவு, மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபி குமாரசாமி […]