Month: December 2024

கோவில்பட்டி

கஞ்சா விற்பனை பற்றி போலீசுக்கு சொன்னதால்தாயை பழிவாங்க சிறுவன் கொலையா?விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின் 2 வது மகன் கருப்பசாமி (வயது 10). 5 வது வகுப்பு படிக்கும் இந்த மாணவன் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.திங்கட்கிழமை காலையில் அவன் வீட்டில் தனியாக இருந்தான். அவனுக்கு அம்மை போட்டு இருந்ததால் தங்க நகை அணிந்தால் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கையில் அவனுக்கு செயின் மற்றும் மோதிரம் அணிவித்து இருந்தனர். இவற்றின் மொத்த எடை 13 கிராம் ஆகும்.வீட்டீல் […]

செய்திகள்

திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் காலையில் விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் வீதி உலா வருகின்றனர். இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் கோவிலை சுற்றி உள்ள மாடவீதியில் வீதி உலா வருகின்றனர்.< கார்த்திகைதீப திருவிழாவின் சிகர நிகழ்வாக 2,668 அடி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் 500 மரச்செடிகள் நடத் திட்டம்

கோவில்பட்டி வட்டம், வில்லிசேரி கிராமத்திலுள்ள பொது இடங்களான மெய்த்தலைவன்பட்டி ஊரணி, வில்லிசேரி தெற்கு குளம்,ஸ்ரீ ராமர் குளம் ஆகிய இடங்களில் ஆலமரம், அரசு, புங்கை, தேக்கு, வேம்பு, வேங்கை, நாவல் போன்ற  சுமார் 500 செடிகளை வில்லிசேரி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக நடவு செய்ய உள்ளோம். என்று வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவர் பி.காசிராஜன் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, வில்லிசேரி கிராமத்தில் பசுமை போர்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு அய்யனார் ஊரணியில் செடிகள் வைக்கப்பட்டு இப்போது […]

கோவில்பட்டி

தெற்குகோனார் கோட்டை பள்ளியில்  நடந்த விழாவில் பாரதியார் வேடமணிந்த சிறுவர்கள் உறுதிமொழி

நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியார்  143 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது,.. கோவில்பட்டி அருகே தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதியின் வேடம் அணிந்து வந்தனர். அவர்கள்   14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திடவும்,குழந்தைகளின் […]

தூத்துக்குடி

கடை வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர்கள்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கடை வாடகை மீதான 18 சதவித ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும் என்பன உள்பட வரி சுமையை குறைக்க தமிழக அரசை வலியறுத்தி […]

செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து டிசம்பர் 24-ம் நாளுடன் 1,000 நாட்கள் ஆகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்து பெருந்துரோகம் இழைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் […]

செய்திகள்

திருமண செயலி மூலம் மோசடி: லட்சக்கணக்கில் சுருட்டிய பெண் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு வரன் தேடி செயலிகள் மூலம் பதிவு செய்திருந்தார். அப்போது அவருக்கு பிரியா என்ற பெண் பழக்கமாகி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்து இருந்த நிலையில், பிரியா தனது அக்காவின் மருத்துவ செலவுக்காக கடந்த ஒரு வருடத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை அந்த விவசாயியிடம் பெற்றுள்ளார். பின்னர் விவசாயி உடனான திருமணத்தை பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்த பிரியா, […]

செய்திகள்

பாரதியாரின் சிலையை பல்லக்கில் தூக்கிச் சென்ற கவர்னர்

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பாரதியாரின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் சிலை பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்துத் தொடக்கி வைத்து பல்லக்கை தூக்கி சென்றார். இந்த ஊர்வலம் அங்கு உள்ள […]

பொது தகவல்கள்

மயில்களால் எற்படும் பயிர் சேதத்தை தடுப்பது எப்படி ?

தற்போது வேளாண்மை சாகுபடியில் பெரும் பிரச்சினையாகவும் சவாலாக வும் இருப்பது வன விலங்குகள் தான். பாடுபட்டு உழைத்த விளைபொருளைகளை நாசம் செய்வதில் பூச்சி/ நோய்களை விட வன விலங்குகள் ( காட்டுப்பன்றி, யானை, மயில், முயல், பறவைகள் ) தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன. இதில்  குறிப்பாக மயில்களின் தொந்தரவு விதைப்பில் இருந்து ( மண்ணில் உள்ள பருப்பை கொத்தி உண்ணுதல் ) விளைப்பொருள் அறுவடைசெய்யும் வரை பெரிய பாதிப்பு  எற்படுகிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் மயில் […]