• May 9, 2024

Month: March 2024

செய்திகள்

‘கை’ யோடு ‘கை’ கோர்ப்போம் வாகன பேரணி; சென்னையில் தொடக்கம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘கை’ யோடு ‘கை’ கோர்ப்போம் என்ற வாகன பேரணி நடத்தப்படுகிறது. இந்த வாகன பயணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்  செல்வப் பெருந்தகை இன்று தொடக்கி வைத்தார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, தளபதி பாஸ்கர், இனாமுல் ஹசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் பரிதாபம்: டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி-

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்க பாலம் உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக  உருவான இந்த பாலம் பொதுமக்களுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது. இந்த பாலத்தின் இருபுற சுவர்களில் இருந்தும் சாக்கடை ஊற்று வந்து கொண்டே இருக்கும்.பாலத்தின் அடிப்புறத்தில் சாக்கடை நீர் அடிக்கடி தேங்கி நிற்கும். மழைக்காலம் என்றால் போக்குவரத்து இந்த பாலத்தில் நிறுத்தபட்டு விடும். சாக்கடை நீருடன் மழைநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும். வாகனங்கள மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பெருகிவிடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் […]

செய்திகள்

கூட்டணிக்காக யாரிடமும் அதிமுக கெஞ்சவில்லை; டி.ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :- தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து, அவர்கள் உரிமையை மீட்டெடுக்கும் அளவிற்கு அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும். திமுகவை சேர்ந்தவர்களே போதை பொருள் கடத்தியுள்ளனர். எந்த கட்சியிலும் இல்லாத அயலக அணி பிரிவு போதை பொருள் கடத்துவதற்காகவே திமுகவில் உருவாக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு ஜாபர் சாதிக் மற்றும் அவரோடு […]

செய்திகள்

அதிமுக கூட்டணியில் தேமுதிக; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

 நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டி திமுக மற்றும் பாஜக பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக தனி கூட்டணி அமைக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிக சேருகிறது.  தொகுதி பங்கீடு தொடர்பான தொடர்பான பேச்சு வார்த்தை இன்று தொடங்கியது. தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி , தங்கமணி, கே.பி.அன்பழகன்,  பெஞ்சமின் ஆகியோர் சென்னை  சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் […]

கோவில்பட்டி

கோவிலில் சுவாமி பாதத்தில் பேனாவை வைத்து பூஜை செய்து தேர்வுக்கு சென்ற பிளஸ்-2

தமிழகத்தில் இன்று பிளஸ்-2  பொதுத்தேர்வு தொடங்கியது.. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெற்றது,. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  பிளஸ்-2பொதுத்தேர்வு  எழுத சென்ற  மாணவ மாணவிகள் பலர் செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி கோவிலில் சுவாமி பாதத்தில் தேர்வு எழுதும்  பேனாவை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

செய்திகள்

பிளஸ்-2 தேர்வு தொடங்கியது; கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 122 பேர் வரவில்லை

தமிழ்நாட்டில். பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் கடந்த  12 ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து பொது  தேர்வு இன்று தொடங்கியது. பொதுதேர்வில், 4.13 லட்சம் மாணவிகள், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.94 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். 3,302 மையங்களில் தேர்வு நடக்கிறது. .இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறை கைதிகளும் தேர்வு எழுதுகிறார்கள். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 30 மையங்களில்  தேர்வு நடக்கிறது. 3105 மாணவர்களும், 3910 […]

செய்திகள்

71-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின்  கேக் வெட்டி கொண்டாடினார்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது முடிந்து 71-வது வயது பிறந்தது. காலையில் வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி, மகன்,  மகள், பேரன்,. பேத்திகள் பங்கேற்றனர். ஸ்டாலின் கேக் வெட்டி அனைவர்க்கும் ஆசையுடன் ஊட்டிவிட்டார். பின்னர் ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு சென்று அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். தொடர்ந்து ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலினுக்கு கனிமொழி, அவரது கணவர் அரவிந்தன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். […]