• May 20, 2024

Month: January 2024

செய்திகள்

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர்கள்  நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. அதில் 23 தொழிற்சங்கத்தினர் இணைந்து வேலைநிறுத்த போராட்டம் குறித்து அறிவித்து இருந்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி என்பது உள்பட  6 கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் 9 ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். சி.ஐடியூ தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 23 தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தன. பொதுவாகப் பொங்கல் […]

செய்திகள்

வரலாற்றை மறைக்காமல் ரஜினி, கமல் பேச வேண்டும்; முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரு.கருணாநிதி அவர்களால் தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் திரு.ரஜினிகாந்த் மற்றும் திரு.கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று! புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர் தான் ஆயிரத்தில் […]

கோவில்பட்டி

பேரிடர் பாதித்த மாவட்டமாக தூத்துக்குடியை அறிவிக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதிக கனமழை பெய்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவித்திட கோரி மத்திய  அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  எட்டயபுரம் தாலுகா குழு செயலாளர் சோலையப்பன் தலைமையில் எட்டையபுரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்ப்பாட்டத்தை  தொடங்கி வைத்தார். மத்திய அரசு பேரிடர் பாதித்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். மாநில அரசு கேட்ட பேரிடர் இழப்பு தொகையினை மத்திய அரசு […]

கோவில்பட்டி

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பற்றிய ஆவண படம் வெளியீடு

கோவில்பட்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கிளை சார்பாக, கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பற்றிய ஆவண படம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் எழுதிய “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” என்ற புத்தக ஆய்வு மற்றும்  எட்டயபுரத்து ஏழிசை புலவா என்ற  பாடல் வெளியிடும் நிகழ்வு ஆகியவை கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில்  நடைபெற்றது.  தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின்  கோவில்பட்டி கிளைச் செயலாளர் அமல புஷ்பம் தலைமை தாங்கினார், தமிழ் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப திருவிழா

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப திருவிழா , ஆலய  பங்கு தந்தை சார்லஸ் அடிகளார், தலைமையில் உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சூசையப்பரும் அன்னை மரியாவும், இறைமகன் இயேசுகிறிஸ்துவும் வாழ்ந்த குடும்பமே திருக்குடும்பமாகும்.இக்குடும்பத்தில் நிலவிய அன்பு,அக்கறை,நம்பிக்கை,இறைஞானம் இவை அனைத்தும் இறைமக்களான நம் குடும்பத்தில் நிலவவேண்டும்  என ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ ஆலயங்களில் திருக்குடும்ப திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழாவில்  அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு […]

கோவில்பட்டி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: கோவில்பட்டியில் 3 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  இன்று காலை தொடங்கியது.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மத்திய பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   மாநாடு தொடக்க நாளில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின்  முன்னிலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், ஹூண்டாய், ஜே.எஸ்.டபிள்யூ, அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும் பல  முன்னணி பன்னாட்டு  […]

செய்திகள்

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ; மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்குடன், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இன்றும் நாளையும், (7,8தேதிகள் )உலக முதலீட்டாளர்கள் […]

தூத்துக்குடி

பசுபதிபாண்டியன் நினைவுதினம்: 10-ந்தேதி மூடப்படும் டாஸ்மாக் கடைகள் பட்டியல்

தூத்துக்குடி வட்டம், மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் 12-வது நினைவு தினம் 10.1.2024 அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ் நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/ பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள 75 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு […]

செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் தரையில் படுத்தபடி கதறி அழுத நடிகர்

மரணம் அடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கபட்டு வருகிறார்கள். விஜயகாந்த் உடல் அடக்கம் நடந்த அன்று வரமுடியாத முக்கிய பிரமுகர்கள், திரை உலகினர் தினமும் விஜயகாந்த் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று நடிகர் சிவா கார்த்திகேயன் தனது மனைவியுடன் விஜயகாந்த் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சாலிகிராமத்தில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி, நெல்லையில் மழையால் பாதிப்பு: 1000 பேருக்கு நிவாரண பொருட்களை நடிகர் பிரசாந்த்

தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கன மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் பிரசாந்த் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தூத்துக்குடியில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது 1௦௦௦  பேருக்கு அரிசி, உடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை நடிகர் பிரசாந்த் வழங்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரசாந்த் கூறியதாவது:- மழைவெள்ளத்தால் பாதிக்ககப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிசெய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அந்த பாக்கியத்தை அளித்து இருக்கிறார். இதே போன்று எல்லோரும் உதவி செய்வார்கள் இந்த மழைவெள்ளத்தில் தமிழக […]