பிரதமர் மோடியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
பிரதமர் மோடியை டெல்லியில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.கேலோ இந்தியா நபோட்டி வருகிற 19-ம் தேதி சென்னையில் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண கூடுதல் நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.