கோவில்பட்டியில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை
![கோவில்பட்டியில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை](https://tn96news.com/wp-content/uploads/2024/01/IMG-20240105-WA0288-850x560.jpg)
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி பஸ்நிலையம் எதிரே தேவர் சிலை அருகில் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிநடைபெற்றது.
விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநிலமகளிரணி துணைசெயலாளர் சுபப்பிரியா தலைமையில் அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ்,நகரசபை சேர்மன் கருணாநிதி,ஒன்றியசேர்மன் கஸ்தூரிசுப்புராஜ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் அனைத்துவியாபார பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/01/IMG-20240105-WA0287-1024x512.jpg)
விஜயகாந்த் மறைந்தஅன்று முடிகாணிக்கை செலுத்திய 30 பேர்களுக்கு வேஷ்டி துண்டு வழங்கப்பட்டது. தேமுதிக செயற்குழ உறுப்பினர் பிரபாகரன், மலைராஜ், மாவட்டதுணைசெயலாளர்கள் சோலைராஜ்,மாரிச்செல்வம், ராஜபாண்டி,பொதுகுழுஉறுப்பினர் கள் காளிதாஸ், முருகன், முத்துசெல்வம், ஒன்றியசெயலாளர்கள் கோவில்பட்டி பெருமாள்சாமி,பொன்ராஜ் விளாத்திகுளம் தங்கச்சாமி மாரியப்பன்,புதூர் மணிகண்டன், ஓட்டப்பிடாரம் ஜெயக்குமார் கயத்தார் அருண், நடராஜன் கயத்தார் நகரசெயலாளர் கண்ணன்,விளாத்திகுளம் நகரம் மணிமேகலை,மாவட்டதொழிற் சங்கதலைவர் சுப்புராஜ், துணைதலைவர் ராஜ் மற்றும் நிர்வாகிகள் கிளைகழக செயலாளர்கள் கலந்துகொண்டனர்
![](https://tn96news.com/wp-content/uploads/2024/01/IMG-20240105-WA0333.jpg)
தே.மு.தி.க.சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட புகழஞ்சலி கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்தியஜனநாயக கட்சியின் மாவட்டதலைவர் பாலமுருகன் அறிவுறுத்தல் படி மாவட்ட செயலாளர் போத்திராஜ் தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அமைப்புசெயலாளர் கோபாலகிருஷ்ணன். மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் வர்த்தக அணி செயலாளர் கே.கே.சி. கண்ணதாசன், மாவட்ட துணை செயலாளர் நாராயணசாமி உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)