• May 9, 2024

Month: September 2023

தூத்துக்குடி

95 விவசாயிகளுக்கு மானியத்தில் பவர்டில்லர், விசை களையெடுப்பான்கள்

வேளாண்மை – உழவர் நலத்துறை   சார்பில் விவசாய பெருமக்களிடையே சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.  இதை தொடர்ந்து , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று (4.9.2023) வேளாண்மைப் பொறியியல் துறையின்  சார்பில்  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம்

நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்தவர்கள். செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பேப்பர் பாய் தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  செய்திதாள்களை இல்லங்களில் சேர்க்கும் காளிராஜ், ஜீவானந்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை […]

தூத்துக்குடி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாக ரீதியாக இருக்கின்ற 20 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு வறுமை கோட்டிற்கு கீழுள்ள 25 மணமக்களுக்கு அந்தந்த பகுதி திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தப்படும் என மானிய கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் திருமணம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த […]

சினிமா

‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ வசனம் மூலம் பிரபலமான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

கமல்ஹாசனின் வெற்றிப்படங்களான ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘குணா’, ‘கலைஞன்’ என எல்லா படங்களிலும் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. 1989ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது. ‘8 தோட்டாக்கள்’, ‘வனமகன்’, என இன்றும் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் ஆர்.எஸ். சிவாஜி, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் […]

கோவில்பட்டி

அப்பனேரி  வெங்கடேஸ்வரா கார்டன் விக்ன விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா

கோவில்பட்டி அப்பனேரி  வெங்கடேஸ்வரா கார்டன்பகுதியில் உள்ள ஸ்ரீ விக்ன விநாயகர் கோவில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது. காலை 5.30மணிக்கு கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் தொடங்கி நடைபெற்றது.இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து  காலை 7.45  மணிக்குமேல் 8.45 மணிக்குள் விக்ன விநாயகருக்கு வருடாபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர்தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.கோவில்கோபுர […]

கோவில்பட்டி

தேசிய விளையாட்டு தினம்: கோவில்பட்டியில் ஆக்கி போட்டி

ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில்  கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தாமரை, மல்லிகை, சூரியகாந்தி ,ரோஸ் என நான்கு அணிகளாக வீரர்கள்  பிரிக்கப்பட்டு லீக் முறையில் ஆக்கி போட்டி நடைபெற்றது. விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் சூரியகாந்தி அணியினர் முதலிடமும், மல்லிகை அணியினர் இரண்டாம் இடமும் பெற்றனர். இதை தொடர்ந்து நடந்த  பரிசளிப்பு விழாவுக்கு […]

கோவில்பட்டி

தேசிய ஊட்டச்சத்து வார விழா: சத்தான உணவு வகைகளை தயாரித்து அரசு பள்ளி

ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதிவரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது. போஷன் அபியான் திட்டத்தின் கீழ் மனையியல், சத்துணவியல் பிரிவு மாணவிகள் அடுப்பில்லா சமையல் உணவு வகைகளான அவல் தயிர் சாதம், சத்து பானகங்கள். பஞ்சாமிர்தம், கடலை உருண்டை, […]

தூத்துக்குடி

உணவு பொருள் பட்டியலில் `கள்’ளை சேர்க்க வேண்டும்; என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்தார். அப்போது அவர்  நிருபர்களிடம் கூறியதாவது:- பெருந்தலைவர் மக்கள் கட்சி 2011-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் பங்கு பெறுவோம். சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை கவர்னர் நிறுத்தி வைத்தது நியாயமற்றது. கவர்னர் மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பனைத்தொழிலாளர்கள் பதநீர் விற்றாலும், கள் விற்றதாக அவர்கள் மீது […]

கோவில்பட்டி

வட்டார விளையாட்டு போட்டி: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி `சாம்பியன்’

தமிழக அரசின் பள்ளிக் கல்விதுறை சார்பில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான வட்டார விளையாட்டுப் போட்டிகள் கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு ஆக்கி மற்றும் கைப்பந்து  போட்டிகளில் 14, 17, 19 வயது பிரிவில் முதலிடமும், மேஜை பந்து போட்டியில் 14, 17 வயது பிரிவில் முதலிடமும் பிடித்தனர் . மேலும், எறிபந்து போட்டிகளில் 14, 17, 19, வயது பிரிவில் 2-ம் இடமும், […]