தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆர். என். சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு இணையான உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் […]
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் வெ. முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் மகேஸ்வரன், நம்பிராஜன், பார்த்தசாரதி, பரமானந்தம், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் ஜெயராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஜெகநாதன், நகர இணை செயலாளர் மாரிசாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில், தமிழக அரசு 70 வயது […]
தீயணைப்பு மாறும் மீட்பு பணிகள் தென்மண்டல உதவி துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் ராஜு. நிலைய அலுவலர் சுந்தராஜ் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் என்.சுப்பையா என்ற சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர், அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார கிராமம் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு தயார் செய்யும் தொழில் நகரம், கோவில்பட்டி குறுகலான தெருக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எதிர்பாதவிதமாக தீவிபத்து ஏற்பட்டால் பெரிய அளவிலான […]
கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டப்பணிகள் சரிவர செய்யவில்லை; அ.தி.மு.க. மீது நகரசபை தலைவர்
கோவில்பட்டி நகரில் அ.தி.மு.க. சார்பில், திமுக நகராட்சியை கண்டித்து அதாவது கடந்த ஆட்சியில் ஒதுக்கிய தொகையில் சாலை பணிகளை நிறைவேற்றாமல் ரத்து செய்துவிட்டதாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நகரசபை தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கோவில்பட்டி நகரசபையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கியதாகவும், அந்த பணியை சரியாக செல்லவில்லை என்றும் அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து […]
கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நான் முதல்வன் திட்ட உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கி பேசினார். உதவி கலெக்டர் ஜெயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் வரவேற்று பேசினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் ஜி.சந்தன மாரியம்மாள், […]
நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற பிறகு தென்காசி மாவட்டத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தென்காசி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 18 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 108 […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை அ.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க. மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டப்பட்டது. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இந்த […]
தூத்துக்குடியில் இருந்து மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு அதிக அளவில் மக்கள் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயிலை கடந்த மே மாதம் மத்திய ரெயில்வே அறிவித்து இயக்கியது. பின்னர் கடந்த ஜூன் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜூலை மாதம் வாராந்திர ரெயிலை இயக்குவதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் (01143) வருகிற 7, 14, 21, 28 (வெள்ளிக்கிழமை தோறும்) ஆகிய […]
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆன்மிகம் நம் நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டுகிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். ஆன்மிகம் எல்லோருக்கும் பாரபட்சமில்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அது குறைவாக உள்ளது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஒரு மதம் சார்ந்த திருவிழாவிற்கு (பனிமயமாதா கோவில்) அதிக பேருந்துகளும் ரெயில்களும் […]