• May 9, 2024

Month: June 2023

கோவில்பட்டி

விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுகளை கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் மேற்கொண்டார்.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. ராஜேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் சிலர் கூடுதல் ஆட்சியர் உடன் சென்று விட்டு பணிகளை முடித்து விட்டு மதியம் 3 மணியளவில் அரசு வாகனத்தில் கோவில்பட்டி திரும்பி கொண்டிருந்தனர்.அச்சமயத்தில்கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் எதிரே இரு மோட்டார் பைக்குகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர்மோதிக் கொண்ட விபத்தில் தலை மற்றும் கண்களில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு சிறந்த ஆய்வு குழுவிற்கான பல்கலைக்கழக விருது

அகில இந்திய மானாவாரி வேளாண்மை  திட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆகியவை கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில்  டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நிதி உதவியுடன் 1971-ம் ஆண்டு முதல் மானாவாரி விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்  மூலம் கடந்த 5 ஆண்டுகளாக (2018 – 2022) ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்கள், செயல் விளக்கங்கள், விவசாயிகளுக்கான வேளாண் பயிற்சிகள், வயல் விழாக்கள் மற்றும் ஆராய்ச்சி […]

கோவில்பட்டி

மணக்கரை தூய திரித்துவ ஆலயத்தில் அசன பண்டிகை ; நன்கொடை பொருட்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி சேகரம் மணக்கரை சபைக்கு உட்பட்ட தூய திரித்துவ ஆலயத்தில் 55-வது பிரதிஷ்டை பண்டிகை, ஸ்தோத்திர பண்டிகை, அசன பண்டிகை என முப்பெரும் பண்டிகை 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு ஆயத்த ஆராதனை நடந்தது. இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு ஆலய பிரதிஷ்ட பண்டிகை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனை நிகழ்ச்சிகளை  ஆலயத்தின் சேகரகுரு  இம்மானுவேல் […]

தூத்துக்குடி

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம்;

அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் (AABCS) என்ற பெயரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றி தூத்துக்குடி தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சுவர்ணலதா விளக்கம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:- அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டத்தில் சுயதொழில் தொடங்க கடன்/மானியம் பெற தகுதி:- *ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்.(தனி நபர்கள், உரிமையாளர் நிறுவனங்கள், பங்குதாரர் நிறுவனங்கள், […]

கோவில்பட்டி

லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய `டிரம்ஸ்’ இசை தேர்வில் வெற்றி பெற்ற கோவில்பட்டி பெனிட்டா

கோவில்பட்டி கடலையூர் ரோடு ஜான் பாஸ்கோ பள்ளி எதிரில்,  பழைய பஸ் நிலையம் அருகே தங்க மயில் ஜுவல்லரி எதிரில், பசுவந்தனை ரோடு முத்துமாரியம்மன் கோவில் எதிரில் மஹாலட்சுமி மகால் அருகே என 3 இடங்களில் ஷெக்கினா இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த் பள்ளியில், இசை நுணுக்கங்கள், பாடலின் தாளம் அறிவது, ராகம் அறிவது, வாசிப்பது, ஜதி சொல்வது, ஸ்வரங்கள் பாடுவது உள்பட பல்வேறு இசை நுட்பங்கள், நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பள்ளி மாணவி.பெனிட்டா ராணி, `டிரம்ஸ்’ […]

கோவில்பட்டி

4 மாத நிலுவை உதவித்தொகை வழங்க கோரி தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் தொழிலாளர் நலவாரிய சங்கத்தினர்  முதியோருக்கான மாத உதவித்தொகை 4 மாதமாக வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் நலவாரிய உருப்பினர்கள  திரளாக கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- , கோவில்பட்டி தாலுகா தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தொழிலாளர் நல […]

கோவில்பட்டி

இளையரசனேந்தலில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை நேற்று காலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பியவாறு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமை தாங்கினார். அப்போது இளையரசனேந்தல் கிராமத்திலுள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அந்த அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் தாசில்தார் வசந்த மல்லிகாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், […]