• May 20, 2024

லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய `டிரம்ஸ்’ இசை தேர்வில் வெற்றி பெற்ற கோவில்பட்டி பெனிட்டா ராணி

 லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய `டிரம்ஸ்’ இசை தேர்வில் வெற்றி பெற்ற கோவில்பட்டி பெனிட்டா ராணி

கோவில்பட்டி கடலையூர் ரோடு ஜான் பாஸ்கோ பள்ளி எதிரில்,  பழைய பஸ் நிலையம் அருகே தங்க மயில் ஜுவல்லரி எதிரில், பசுவந்தனை ரோடு முத்துமாரியம்மன் கோவில் எதிரில் மஹாலட்சுமி மகால் அருகே என 3 இடங்களில் ஷெக்கினா இசைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த் பள்ளியில், இசை நுணுக்கங்கள், பாடலின் தாளம் அறிவது, ராகம் அறிவது, வாசிப்பது, ஜதி சொல்வது, ஸ்வரங்கள் பாடுவது உள்பட பல்வேறு இசை நுட்பங்கள், நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த பள்ளி மாணவி.பெனிட்டா ராணி, `டிரம்ஸ்’ வாசிப்பதில் சிறந்தவர், அவரை நேர்த்தியாக பயிற்றுவித்து, லண்டன் ட்ரினிட்டி சர்வதேச இசைப் பல்கலைக்கழகம் நடத்தும் மேற்கிந்திய இசை திட்டத்தில் டிரம்ஸ்  தேர்வில் பங்குபெற வைத்தனர்,

தற்போது அதன்  முடிவுகள் வந்துள்ளது, தென் தமிழகத்தில் முதன்முறையாக ஒரு மாணவி  `டிரம்ஸ்; இசைத்தேர்வில் நூற்றுக்கு தொண்ணூறு மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

விரைவில் அவருக்கான சான்றிதழ் லண்டன் ட்ரினிட்டி சர்வதேச இசைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டவுடன், அவருக்கு பாராட்டு … விழா நடத்துவதற்கு இசைப்பள்ளி முடிவு செய்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *