• May 20, 2024

Month: June 2023

கோவில்பட்டி

மாவட்ட ஆக்கி போட்டி : பாண்டவர்மங்கலம் அணிக்கு முதல் பரிசு

டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கழகத்தின் சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி தாமஸ் நகர் ஆக்கி மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட்து.இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 10 அணிகள் கலந்து கொண்டன.இறுதி போட்டியில் பாண்டவர்மங்கலம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அம்பேத்கர் அணியை வென்றது.இரண்டாம் இடத்தை அம்பேத்கர் ஆக்கி கழக அணி பெற்றது.மூன்றாம் இடத்தை பாரதிநகர் அணியும்,நான்காம் பரிசை கூசாலிபட்டி அணியும் தட்டிச்சென்றன.போட்டியின் இறுதியில் இன்று மாலை பரிசளிப்பு விழா […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெண்ணின் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு -பரபரப்பு

கோவில்பட்டி சுபா நகரில் உள்ள துரை என்பவர் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார். இந்த அலுவலகத்தில் மந்தித்தோப்பைச் சேர்ந்த பாலு என்பவருடைய மகள் தங்கம் (வயது 21)பணியாற்றி வருகிறார்.இவர் தினமும் மந்தித்தோப்பில் இருந்து அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வருவது வழக்கம்.நேற்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்கு தனது ஸ்கூட்டரை எடுத்தபோது அதில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனால் பயந்து போன தங்கம், உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். ‌அவர்கள் கம்பை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மானாவாரி விவசாயிகள் சுயசார்பு நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் ஆலை தொடக்கம்

கோவில்பட்டி மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி ,லிமிடெட், கடந்த 3.9.2014 அன்று சுயசார்பு நிறுவனமாக கம்பெனி சட்டம் 2013 பிரிவின் கீழ் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்த நிறுவனத்தை  5 இயக்குனர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள். கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 224 சிறு விவசாயிகள் மற்றும்  791 பிற விவசாயிகளாக மொத்தம் 1015 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனமான ரூ.40 லட்சத்துக்கு 35.29 லட்சம் மூலதன பங்குகளாக விவசாயிகளிடம் […]

செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.2 […]

செய்திகள்

ஒடிசா ரெயில்விபத்து: அரசு நிகழ்ச்சிகள் இன்று ரத்து- மு.க.ஸ்டாலின்அறிவிப்பு

தமிழக அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி

100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் மொழிப்போர் தியாகி பா.முத்து கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார், நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன் தலைமை தாங்கினார்.,  முன்னாள் நகர பொருளாளர் அண்ணாத்துரை,சட்ட நகல் எரிப்பு போராட்ட வீரர் நாஞ்சில்குமார், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் தங்கப்பாண்டியன், கருப்பசாமி மற்றும் அழகப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி; ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல, ஆலை பாதுகாப்பை ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை; டெண்டர் கோரப்பட்டது

கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் இருந்து முடுக்கு மீண்டான்பட்டி வரை மொட்டைமலை அடிவாரத்தில் பழமையான விமான ஓடுதளம் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்ட இலக்குமி ஆலை நிர்வாகம், அதன் கிளையை 1941-ம் ஆண்டு கோவில்பட்டியில் நிறுவியது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு விமானத்தில் வந்து செல்ல வசதியாக அரசிடம் அனுமதி பெற்று ஒப்பந்த அடிப்படையில் 2 கி.மீ. தூரத்துக்கு  100 அடி அகலத்தில் விமான ஓடு தளம் அமைத்தனர். 1978-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வைகாசி விசாகம்; பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்  

வைகாசி மாதம் வரும் பவுர்ணமி, வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது. இந்த வைகாசி விசாகம் முருகன் பிறந்த நாளாக கருதப்படுகிறது. விசாகம் நட்சத்திரத்திற்கு என்று பல சிறப்புகள் உள்ளன. அதில் முக்கியமானது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் தொடங்குவது இந்த விசாக நட்சத்திரங்கள்தான். இந்த விசாக நட்சத்திரத்திற்கு ஜோதிட ரீதியாக குரு அதிபதி ஆவார். Adவைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில்  கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் […]

கோவில்பட்டி

புதிய இணைப்பிற்கு மின்சார மீட்டர் வழங்குவதாக பணம் பறிக்கும் கும்பல்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு வேண்டுகோள்! விடுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்  கூறி இருப்பதாவது:-  கோவில்பட்டி கோட்ட பகுதியில் பொதுமக்களிடம் மின்வாரிய பணியாளர்களை போன்று பேசி புதிய மின் இணைப்பிற்கு மீட்டர் வழங்குவதாக கூறி பணம் வசூல் செய்து சிலர் ஏமாற்றுவதாக தெரிகிறது .எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் புதிய மின் இணைப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு […]