• May 20, 2024

Month: January 2023

செய்திகள்

சென்னை மெரினாவில் குடியரசுதின கொண்டாட்டம்: கவர்னர் தேசிய கொடியேற்றினார்;அண்ணா பதக்கங்களை முதல்- அமைச்சர்

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். பின்னர், 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

நாட்டின் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊழியர்கள், அலுவலகர்கள் திரண்டு இருந்தனர். காலையில் நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தேசிய கொடியேற்றினார். அதை தொடர்ந்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். நகராட்சி பொறியாளர் பி. கே. ரமேஷ், உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், காஜா நஜிமுதீன், வள்ளி ராஜ், வருவாய் அலுவலர் ரமேஷ் குமார், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் குடிநீர் பிரச்சினை :நகராட்சி பொறியாளரை காருடன் சிறைபிடித்து மக்கள் போராட்டம்

கோவில்பட்டி நகராட்சி 5வது வார்டு வேலாயுதபுரத்தில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை என்று அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து நகராட்சி பொறியாளர் ரமேஷ், வேலாயுதபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துள்ளார். 2வது குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை, குறைவாக வருவதாகவும், எனவே முதல் குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் லலராஜா மற்றும் பொது மக்கள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி

தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று (22.1.2023) காலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் மாபெரும் “மினி மராத்தான்” போட்டி நடத்தப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ராஜீவ் நகரில் சாலையை சீரமைக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூங்கும்

கோவில்பட்டி ராஜீவ் நகர் ஆறாவது சாலை முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் மினி பஸ் ஓட வில்லை ஆகையால் சாலையை  உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜனதா  ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் வசந்த் ராஜ் நகர தலைவர் சீனிவாசன் ஊடகபுரி மாவட்ட செயலாளர் ராஜகாந்தன் அரசு தொடர்பிரிவு நகரத் தலைவர் வெள்ளைச்சாமி மகளிர் மாவட்ட செயற்குழு […]

கோவில்பட்டி

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவில்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கடந்த 18-11-2022 இரவு 10 மணி அளவில் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் வேலையை முடித்து கிளம்பும் பொழுது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் வந்த இருவர், டாஸ்மார்க் கடைக்குள் புகுந்த்தனர் அவர்கள் கத்திமுனையில் மிரட்டி  ரூ. 1,50,470 _ஐ கொள்ளையடித்து  சென்றனர்.இதுகுறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி எட்டையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை-எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை; சரத்குமார் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி .27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ், அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கட்சியின் உயர்மட்ட குழு […]

செய்திகள்

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ;டி.ஜெயக்குமார் தலைமையில் கட்சியினர் உறுதிமொழி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது, வடசென்னை தெற்கு (கிழக்கு ) மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் பேரணி நடைபெற்றது மாவட்ட கழக , பகுதி கழக ,வட்ட கழக , மகளிர் அணி சார்ந்த  நிர்வாகிகள்,  கலந்து கொண்டனர். ராயபுரத்தில் இருந்து பேரணி கிளம்பி பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகே பேரணி முடிந்தது,. அங்கு அலங்கரித்து […]

கோவில்பட்டி

மின்சார கம்பத்தை  இடமாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தவர்  பொன்ராஜா. இவர் கோவில்பட்டியை சேர்ந்த  பாரதிசங்கர் என்பவரிடம், நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்றுவதற்காக மின்சார கம்பத்தை இடம் மாற்றி அமைக்க ரூ.5 ஆயிரம்  லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது, இது பற்றி  பாரதிசங்கர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசிடம் தகவல் சொன்னார். பின்னர் அவர்கள் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் மின்வாரிய இளநிலை பொறியாளர் பொன்ராஜாவை நேரில் சந்தித்து ரசாயனபவுடர் தடவிய […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு

ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.ஸ், அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தலின் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் […]