• May 20, 2024

Month: January 2023

செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில்  40-ம் நமதே என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்”- அ.தி.மு.க. வாக்குச்சாவடி

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டம் முடிந்ததும்  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்  40-ம் நமதே நாடும் நமதே  என்ற அடிப்படையிலே கழக செயல்வீரர்கள்,வீராங்கனைகள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய […]

செய்திகள்

பா.ஜனதாவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்; அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டு

நடிகையும்,  நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜனதாவில்  இணைந்து பணியாற்றி வந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார, இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22ந் தேதி காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்பட்டார், இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் ” தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் […]

செய்திகள்

 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை 4-ந்தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செய்திகள்

நாகூர் கந்தூரி விழாவில்  சந்தனக்கூடு ஊர்வலம்

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 466-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24,ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு […]

செய்திகள்

கடிதத்தை வாங்க அ.தி.மு.க. மறுப்பு:: தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்தார்

மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு, இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது. ‘ ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஒருவர் தங்கள் தொகுதிகளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 25 அணிகள் பங்கேற்ற பிரமாண்ட கைப்பந்து போட்டி

கோவில்பட்டி களம் உடற்பயிற்சி மையம் சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான பகல், இரவு கைப்பந்து போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன, இளையரசனேந்தல் சாலையில் எல்.பி.எல்.கிட்ஸ் பார்க் எதிர்புறம் உள்ள களம் உடற்பயிற்சி மைய மைதானத்தில் இப்போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் மொத்தம் 25 அணிகள்  பங்கேற்றன. பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்க இருக்கை வசதி செய்யப்பட்டு இருந்தது. போட்டிகள் இரண்டு தடங்களில் நடந்தது. முதல் நாளன்று போட்டியை எவரெஸ்ட்  மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.மகாலட்சுமி […]

செய்திகள்

தி.மு.க.இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் கழக தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்தின் 72 கழக மாவட்டங்கள், பாண்டிச்சேரி-காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்கள், கீழ்க்கண்ட 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் இளைஞர் அணி துணை செயலாளர் ஒருவர், மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளிட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் […]

செய்திகள்

சிறுபான்மை ஆணைய துணை தலைவர் கொலை : தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மோசம்

தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில்  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின்  திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய சட்ட ஆணையமே பொதுச்செயலாளர் என்ற அடிப்படையிலே கடிதம் அனுப்பியுள்ளது.இது மத்திய அரசின் அங்கீகாரம் என்ற அடிப்படையில் இதனை எடுத்துக்கொள்ளலாம்.இந்திய தேர்தல் […]

தூத்துக்குடி

தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்: `தமிழர் கலைகளை வாழ வையுங்கள்’-தமிழன்டா இயக்கத்

தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழர் பண்பாடு மேலோங்க வேண்டும் என்று சொன்னால் அனைத்து தமிழர்களும் தங்கள் இல்லங்களில் நையாண்டி மேளம், பறை ஆட்டம், சிலம்பு ஆட்டம் உட்பட தமிழர் கலைகளை நிகழ்த்த வேண்டும்,  குறிப்பாக கிறிஸ்தவர்கள் மேற்கத்திய பேண்ட் வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்  இவர்கள் இன்று தாண்டியார் ஆட்டம் ஆட ராஜஸ்தான் மேளமான நாசிக் டோல் -யும் பயன்படுத்துகின்றனர்* கேரளா மாநில  செண்டை மேளத்தை பயன்படுத்துகின்றனர் ஆனால் இந்த […]

சிறுகதை

நாணயம்… (சிறுகதை)

தூத்துக்குடியில்  இருந்து  கோவில்பட்டிக்கு  புறப்பட்டது அந்த தனியார் பஸ்.அன்று பஸ்சில் அதிக கூட்டம்.. கண்டக்டர் டிக்கெட் போடத்தயாரானார்.. லேடிஸ் முன்னே போங்க..லேடிஸ் முன்னே போங்க..என்று அவர் குரல் கொடுக்க… பெண்கள் முணங்கியபடி இன்னும் எங்கே முன்னுக்குப்போறது..ஏற்கனவே கூட்டமா இருக்கு…இன்னும் ஆளை ஏத்தப்போறீயளா..சும்மாவே மூச்சுவிடமுடியல..என்றனர். கண்டக்டர் அதை கண்டுகொள்ளாமல் டிக்கெட்போடுவதிலே குறியாக இருந்தார். பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றபோது நான்கு வாலிபர்கள் தாவி ஏறினார்கள். தலையை ஒரு சின்ன சீப்பால் சீவி மீண்டும்  கலைத்துவிட்டுக்கொண்டார்கள். பஸ் புட்போர்டில் இரண்டுபேர் […]