• May 10, 2024

Month: October 2022

செய்திகள்

இலவச பஸ் பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-ஆம்னி பஸ் முதலாளிகளுக்கு பண்டிகை காலத்தில்தான் வருமானம் கிடைக்கும். வசதியானவர்கள், ஆம்னி பஸ்சில் செல்லலாம். ஏழை மக்கள் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார்.இதை சொல்வதற்கு எதற்கு அமைச்சர் என்று தெரியவில்லை. ஒரு முறை பயணிப்பதற்கு ரூ.4 ஆயிரம் என்றால், அதன் பிறகு ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். எல்லாமே […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட மாநாடு

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட 5வது மாநாடு கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகிகள் சுப்பராஜ், நம் சீனிவாசன் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரஇந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழரசன் மாநாட்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் `டூரோகார்டு- ஸ்டீல் டோர்’ ஷோரூம் திறப்பு விழா

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டூரோகார்டு நிறுவனத்தின் ஸ்டீல் டோர் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கண்டு ஷோரூமை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.இந்நிகழ்ச்சியில் அருண்குமார், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் சுதா (எ) சுப்புலட்சுமி, மாவட்ட மானவரணி துணை தலைவர் செல்வக்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் […]

செய்திகள்

ஊழியர்கள் போராட்டம்: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனங்கள்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி, பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கடந்த 2 நாட்களாக, சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து வாகனங்களும், […]

செய்திகள்

95-வது பிறந்தநாள்: சிவாஜிகனேசன் உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை

நடிகர் திலகம் பத்மஸ்ரீ செவாலியே சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.10.2022) சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் . சு. திருநாவுக்கரசர், எம்.பி., துணைத் தலைவர்கள் திரு. ஆ. கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, . டி.என். முருகானந்தம், கீழானூர் ராஜேந்திரன், ப. செந்தமிழ்அரசு, […]

செய்திகள்

ஓய்வூதியம் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரி; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் கோபால் என்ற முதியவர், யாசகம் பெற்று வந்தார். அவ்வப்போது அவர், சிலரிடம் சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களைப்பற்றி கூறியுள்ளார். அதாவது, அவர் அரசுத்துறையில் பணியாற்றியதாகவும், ஓய்வு பெற்ற பின்னர் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்காததால் ஏற்பட்ட வறுமையால் கோவில், கோவிலாக சென்று பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.இதையறிந்த பக்தர் ஒருவர், தனது நண்பரான வக்கீல் ஜின்னா என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் தேவராணி தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், நகராட்சி 32வது வார்டு கவுன்சிலருமான கவியரசன் கலந்து கொண்டார்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கான 9 தீர்மானங்களை ஆசிரியை பிளசிங் காருண்யா வாசித்தார், அதனை தொடர்ந்து 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன, ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார், இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் […]

கோவில்பட்டி

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ; அதிக வார்டுகளில் தி.மு.க.வெற்றி

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைத்தின் வழிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதால் கடம்பூர் […]

செய்திகள்

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத்தீ: கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று போற்றப்படும் சதுரகிரி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை,பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.அந்த வகையில் இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் […]

செய்திகள்

2-ந்தேதி கிராமசபை கூட்டம் இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்-தலைமை செயலாளர் இறையன்பு

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, அக்டோபர் 2-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-2.10.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.*கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் . 2020 – 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மூலமும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 500 பேர் கொண்ட கிராமத்தில் […]