சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.வருகிற 23-ந் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழு பற்றி ஆலோசிக்க கூடிய இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதே கருத்தை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலோர் வலியுறுத்தி பேசினார்கள்.இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா.இந்த மாணவருக்கு சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.இளம் வயதில் கார் பற்றிய பல விஷயங்களை மிகவும் துல்லியமாக கூறி வருவதால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே ஆசியா புக் ஆப் ரிக்கார்டு , இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்டு ,தி […]
புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின வகுப்பை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதுமேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க […]
தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். இவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தை சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழிகாட்டல் – நெறிமுறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அடுக்கடுக்கான கட்டளைகள் பிரபித்து இருக்கிறார், அதன் விவரம் வருமாறு:- குற்றம் சாட்டப்பட்ட நபர்களை – சந்தேக நபரை அடிக்கவோ அல்லது சித்தரவதை செய்யவோ கூடாது. இதுகுறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மேல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனிப்படை (Special Team) போலீசார் கண்காணிக்கப்பட வேண்டும். *குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையம் தவிர லாட்ஜ்கள், […]
தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள், ஐஸ்பாக்ஸ், மீன்பிடி வலை, மீன்பிடி சாதனங்களை ஏற்றும் பணியிலும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 61 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்றுள்ளதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் […]
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை அவசியம்; நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்- டி.ஜெயக்குமார்
சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றத இந்த கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘கருத்து கேட்பு என்ற அடிப்படையில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.அதன் அடிப்படையில் ஆரோக்கியமான அடிப்படையில் நான்கரை மணிநேரம் அமைதியாக நடைபெற்றது என்றால் ஒரு ராணுவ கட்டுப்பாடு உள்ள இயக்கம் கழகம் என்பதை இதன் மூலம் நிச்சயமாக நீங்கள் அறியலாம்.பொதுக்குழு கூடவுள்ள நிலையில் அந்த பொதுக்குழுவை ஒட்டி இன்றைக்கு இந்த […]
சினிமா டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டி.ராஜேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.ராஜேந்தரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்தன. விசா நடைமுறைகளும் முடிந்துள்ளன.இதையடுத்து டி.ராஜேந்தர் […]
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக் கோவில் சென்று முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு கிரி வீதியில் அமைந்துள்ள ரோப் கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும்போது இயற்கை அழகை […]
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)