• February 7, 2025

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

 பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

Chennai, Dec 09 (ANI): Tamil Nadu CM MK Stalin holds a review meeting with the Chief Secretary and various department secretaries on the current situation and restoration works being done after the cyclone-induced floods in Chennai, Tiruvallur and Kanchipuram districts, on Saturday. (ANI Photo)

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர்.

போனஸ் அறிவிப்பால் 2.75 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.அவர்களுக்கு ரூ.369 கோடி கருணை தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *