Month: August 2024

செய்திகள்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார்

வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை தாக்கி இலங்கை கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை பறித்துள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கோடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவர்களை தாக்கி […]

கோவில்பட்டி

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

கோவில்பட்டி குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. தாய்ப்பாலின் அவசியம் குறித்து ஜேசிஐ சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பானம்,மற்றும் பேரிச்சம்பழம்,கடலை மிட்டாய் உள்ளிட்ட ஊட்டச்சத்து பெட்டகம். வழங்கப்பட்டது. விழாவிற்கு கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்,குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பாலம்மாள் ஆகியோர் […]

செய்திகள்

மா மதுரை விழா; காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று  முதல் 4 நாட்கள் நடைபெறும் மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் “மா மதுரை” விழாவை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  அவர் பேசுகையில்  கூறியதாவது:- மதுரையின் பண்பாட்டைக் கொண்டாடும் இந்த நிகழ்வை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல, எல்லோரும் போற்றலாம். இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. 2000 ஆண்டு வரலாறு கொண்டது. 1866 ஆம் ஆண்டே […]

கோவில்பட்டி

கல்லூரி மாணவர்களுக்கு குடிமைப் பணி தேர்வு முறைகள் விழிப்புணர்வு பயிற்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முறைகள் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தி இந்து குழுமம் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்தும் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை  நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஏற்றி  தொடங்கி  வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் அவர்கள், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல், […]

சினிமா

`அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறேன்’- நடிகை நந்தினி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது அவர், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் […]

சினிமா

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா, நடிகை சோபிதாவுடன் 2-ம் திருமணமா?

நாகசைதன்யா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து 2017 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துள்ளிப்பாளா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன. அதற்கு […]

சினிமா

இந்தி படத்தில் தனுஷ் ஜோடி கீர்த்தி சனோன்?

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதற்கிடையில், தனுஷ் பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். இதற்கு அடுத்ததாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார்.இந்தநிலையில், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் […]

தூத்துக்குடி

மாநில டேக்வாண்டோ போட்டி: தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

தூத்துக்குடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி துர்கா ஸ்ரீதேவி மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தமைக்கான பாராட்டு சான்றிதழை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் வழங்கினார்கள். […]

ஆன்மிகம்

கோவில் கோபுரம்/ விமானம் பற்றிய விளக்கம்

கோவில் கோபுரம் , விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன? என்பது பற்றிய விளக்கம்இங்கே காணலாம். கோவில்  என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ள வேண்டும்.  இதனையே  திருமந்திரத்தல் திருமூலர்  ” மானிடர் ஆக்கை சிதம்பரம் “என்பார் மனிதனின் தலை கழுத்து மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படி யாக கோவிலின்  கர்ப்பக் கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன, கருவரை  விமானம் = தலை அர்த்த மண்டபம்  = கழுத்து மகாமண்டபம்  = மார்பு […]

ஆன்மிகம்

மாங்கல்யம்காக்கும் சோமவாரபூஜை

அந்த மன்னனின் பெயர் சித்திரவர்மன். அவனுடைய மகள் சீமந்தினி. மகளின் மீது தந்தை உயிரையே வைத்திருந்தான். ஒருநாள்… ஜோதிட வல்லுநர்களை அழைத்தான். தன் மகளுக்கு ஜாதகம் எழுதும்படி பணித்தான். அடடா… உங்கள் மகளின் ஜாதகம் அமோகமாக இருக்கிறது. அழகில் லக்ஷ்மிக்கு இணையானவள். கலை மற்றும் வித்தைகளில் கலைமகளைப் போல் திகழ்வாள். வீரத்திலும் தீரத்திலும் அன்னை உமையவளின் அடியொற்றி வாழ்வாள். உலகமே மெச்சும் ஆண்மகனை, கணவனாக அடைவாள்’ என்றார் ஜோதிடர் ஒருவர். இன்னொரு ஜோதிடர் இறுகிய முகத்துடன் தலை […]