• May 20, 2024

Month: February 2024

செய்திகள்

அண்ணா நினைவு தினம் :எடப்பாடி பழனிசாமி மரியாதை 

பேரறிஞர்  அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்ட்து. இதையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவ படத்துக்கு  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி  மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி

விஜய் கட்சி தொடக்கம் : கோவில்பட்டியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் தொடங்குவதாக நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர் மன்றத்தினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மகளிர் அணி தலைவி   செல்வி விஜய் தலைமையில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன் இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் செண்பகராஜ் பொருளாளர் மாரிசாமி, மாவட்ட மகளிர் அணி முருகேஸ்வரி நாகலட்சுமி,கனகலட்சுமி, ராஜேஸ்வரி, சுப்புலட்சுமி, துணை செயலாளர் சரவணன், அசோக், […]

கோவில்பட்டி

ஆ. ராசா படத்துக்கு அவமரியாதை : கடம்பூர் ராஜூ உள்பட 9 பேர்

 கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு நேற்று  அதிமுக சார்பில்  முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில்  நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  அப்போது  மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி .ஆர் தொடர்பாக ஆ.ராசா பேசியதை கண்டித்து அதிமுகவினர்  ஆ.ராசா படத்துக்கு அவமரியாதை செய்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்  இது குறித்து திமுக சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்  மகேந்திரன்  கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். இதன் அடிப்படையில் […]

தூத்துக்குடி

4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்; 9 பேருக்கு புதிய மாற்று இடம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கடந்த 25.1.2024 இல்  அறிவித்த சப் இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பின்வரும் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ்க்கண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், மேற்கண்ட காவல் துணை ஆய்வாளர்களை உடனடியாக விடுவித்து, பணியிடத்தில் சேரும் தேதியை முன்கூட்டியே […]

தூத்துக்குடி

அனைத்து வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் அனைத்து வந்கியாளர்களுடனான ஆய்வு கூட்டம் ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. திட்ட இயக்குனர் வீரபத்திரன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்

இந்தியாவில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் 1947 ம் ஆண்டு  தொடங்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம்  தேதி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் செயற்கை முத்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் […]

கோவில்பட்டி

விஜயாபுரி அரசு பள்ளியில் கோள்கள் திருவிழா

தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் கோள்கள் திருவிழாவை தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி  நடத்தி வருகிறது. கோவில்பட்டியை அடுத்த விஜயாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களுக்கு கோள்கள் பற்றியும் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சிஅளிக்கப்பட்டது. கோள்கள் திருவிழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) வாசுகி தலைமை தாங்கினார்.கோவில்பட்டி அஸ்ட்ரோகிளப் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமுருகன், சுரேஷ்குமார் ஆகியோர் வானியல் குறித்தும் […]

செய்திகள்

விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிலான இந்த கட்சியை முறைப்படி இன்று டெல்லியில் பதிவு செய்யப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என்றும் விஜய் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர், தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். சென்னையை அடுத்த நீலாங்கரையில் விஜய் ரசிகர்கள் பட்டாசு […]

செய்திகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை  மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென்காசி தொகுதியில்  போட்டியிட்டவர். நெல்லையைச் சேர்ந்த, திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் […]

செய்திகள்

தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் […]