• May 9, 2024

Month: January 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி பஸ்நிலையம் எதிரே தேவர் சிலை அருகில் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிநடைபெற்றது. விஜயகாந்த்  திருவுருவப்படத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநிலமகளிரணி துணைசெயலாளர் சுபப்பிரியா தலைமையில் அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் முன்னிலையில்  சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ்,நகரசபை சேர்மன் கருணாநிதி,ஒன்றியசேர்மன் கஸ்தூரிசுப்புராஜ் மற்றும்  அனைத்து கட்சி பிரமுகர்கள் அனைத்துவியாபார பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை […]

செய்திகள்

பிரதமர் மோடியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு 

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.கேலோ இந்தியா நபோட்டி வருகிற 19-ம் தேதி சென்னையில் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். மேலும் தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண கூடுதல் நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். About […]

கோவில்பட்டி

மாவட்ட ஆக்கிப்போட்டி : பாண்டவர்மங்கலம் அணிக்கு முதல் பரிசு

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் சார்பாக 18 ஆம் ஆண்டு அய்யாசாமி நினைவு மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் 2  நாட்கள் நடைபெற்றது இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின இறுதிப்போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி   அணியினரும் இலுப்பையூரணி டாக்டர் அம்பேத்கார் ஆக்கி கிளப் அணியினரும் விளையாடினர் ஆரம்பம் முதல் இறுதி வரை பரரப்புடன் போட்டி இருந்தது. இப்போட்டியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். இறுதியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி […]

தூத்துக்குடி

பெருமழையால் சேதமடைந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு; கனிமொழி ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் ஆன்சைட் அருங்காட்சியகம் பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. வெள்ள நீர் அகற்றப்பட்டு,சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்கு திறக்கப்பட்டது. இன்று (4/1/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி

அஞ்சல் காப்பீட்டு திட்டம்: விபத்தில் மரணம் அடைந்தவருக்கு ரூ.10 லட்சம்

கீழஈரால் அஞ்சலகம் மூலம் ரூ.396/- செலுத்தி  குழு விபத்து காவலர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த  ஜெயகுமார் தங்கவேல்சாமி என்பவர் கடந்த 7.7.2023 அன்று செங்கல்பட்டில் வைத்து நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, அவரால் நியமிக்கப்பட்ட  நியமனதாரரான ரோஜா ராணிக்கு இன்று(3.1.2024-) கோவில்பட்டி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் கோட்ட தபால் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி

கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி 

தூத்துக்குடி அருகே மேலமருதூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக குளம் நிரம்பி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த  ஏராளமானோர் அதில் குளித்து வருகின்றனர்.    நேற்று  மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்க சென்றனர். இதில் மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை பார்த்த கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு மஞ்சள் பால் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, […]