கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி.ராஜகோபால், இன்று காலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். காதில் பூ சுற்றிக்கொண்டு அவரும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பேப்பரை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். பின்னர் கோட்டாட்சியர் ஜெயாவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்காக கூடுதல் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்த போது ஊரின் பல்வேறு பகுதிகளில் […]
கோவில்பட்டியை அடுத்துள்ள மூப்பன்பட்டி திருமங்கை நகரில் குடியிருப்பவர் அழகர்சாமி மகன் மகேஸ்வரன் (வயது 45). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் மதுரை- நெல்லை நாற்கர சாலை சர்வீஸ் ரோட்டில் இருந்து மூப்பன்பட்டி விலக்கு ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் […]
நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார். அதே சமயம் அவர் அரசியலுக்கு தயாராகி வருவதாக த தெரிகிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்து பேசி உள்ளார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு பொதுமக்களில் 72.50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக […]
கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு சொந்தமான கோவில்பட்டி மேட்ச் கம்பெனி என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையின் அலுவலகத்தில் இன்று காலையில் திடீரென அதிகளவில் புகைமூட்டம் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் அலுவலக அறைக்கு சென்று பார்த்தபோது தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் விவரம் குறித்து கோவில்பட்டி வட்டாட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
மத்திய அரசின் திட்டங்களை முறையாக மக்களுக்கு நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள ஊழல்களை கண்டித்தும் பா..ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி நகரம் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பசுவந்தனை ரோடு நாடார் மெட்ரிக்குலேசன் பள்ளி எதிர்புறம் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமைதாங்கினார். பொதுசெயலாளர் வசந்தராசு, சந்தானம், மாநில செயலாளர்கள் சிவந்தி நாராயணன், மோகன்தாஸ், ஊடக பிரிவு […]
சென்னையில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கோப்பை , வீரர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வந்த ஆசிய வெற்றிகோப்பைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கபட்டது. இதற்கான நிகழச்சி கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆக்கி மைதானத்தில் நேற்று (23.7.2023) நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட […]
கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமியில் மாணவர்களுக்கான ஜூனியர் ஜே.சி.ஐ. அமைப்பு தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் டென்சிங், மண்டல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். ஜூனியர் ஜே.சி.ஐ. தலைவராக ஆண்டோ ஜார்ஜ் பதவி ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஜே.சி.ஐ. துணைத்தலைவர்கள் விகாஸ், ரகுபதி […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில், டி.ஜெயக்குமார் பெஞ்சமின், செம்மலை, தம்பிதுரை, பாலகங்கா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :- மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் […]
சர்க்கரை நோயாளிகள் ஒழுங்கற்ற உணவு அட்டவணையை பின்பற்றுகிறார்கள் அல்லது காலை உணவைத் தவிர்க்கிறார்கள், என்றால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் மோசமான சிக்கலை எதிர் கொள்வார்கள். காலை உணவு என்பது ரொம்ப முக்கியமானது. அதிலும் சர்க்கரை நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்க கூடாது. உணவு இடை வேளைகளில் இரவு உணவு மற்றும் காலை உணவிற்கு இடைப்பட்ட நேரம் தான் அதிகம். காலை உணவை தவிர்த்தால், ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். […]







