ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து இடைத்தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதுபோன்று அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் […]
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டால் நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் பெறுவார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக,இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்,திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அதை மக்களுக்கு எடுத்து சொல்லி திமுகவுக்கு எதிராக மிக பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்றார். 2024 […]
கோவில்பட்டி அருகே கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. தொடக்கி வைத்தார் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவிற்கு தலைமை தாங்கினார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட […]
கோவில்பட்டி தினசரி மார்க்கெட், கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது ;கனிமொழி எம்.பி.ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் உள்ள கட்டிடங்கள் சிதலமடைந்து காணப்படுவது மட்டுமின்றி, நாளுக்கு நாள் அதிகரித்து நெருக்கடியும் அதிகரித்து வருவதால், தினசரி சந்தையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்தது.. இதையடுத்து ரூ.6 கோடியே 84 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தருவது தொடர்பாக நகரில் பல […]
‘கொவில்பட்டி கோட்டத்தில் மாதம் ஒரு முறை பராமரிப்பு காரணமாக 8 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார தடை அறிவிக்கப்பட்டு ந்டைமுரைப்படுத்தப்பட்டு வருகிறது,. அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில் மின்தடை அறிவிப்பதும் பின்னர் ஒரு காரணத்தை சொல்லி அதை ரத்து செய்து இன்னொரு நாள் மின் தடை என்று சொல்வதும் அடிக்கடி நடக்கும் செயல் ஆகிவிட்டது, 2 மாதங்களுக்கு முன்பு இப்படி செய்த மின்வாரியம் மீண்டும் இன்று […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் மாரியப்பன் தலைமையில் கயத்தாறு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) ஜோதிபாசு உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பயன்படுத்திய எண்ணெய் டின்களில் முறையே 2,535 லிட்டா் மற்றும் 1,155 லிட்டா் கடலை எண்ணெய், 2,295 லிட்டா் பாமாயில் ஆகியன இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் முறையாக அச்சிடப்படவில்லை.ஆகவே, சந்தேகத்துக்குரிய உணவுப் […]
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 65). இவர் நேற்று மாலை தனது விவசாய கிணற்றில் துணி அலசி விட்டு திரும்பிய போது அவரது பேரன் அருகே வந்தார். அப்போது அருகில் வசிக்கும் செபஸ்டியான் என்பவர் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் ஓடி வந்ததால் அவை கடித்து விடும் என்ற பயத்தில் குச்சி எடுத்து வருமாறு தனது பேரனிடம் கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த செபஸ்டியான் மகன் வின்சென்ட் அவருடன் வாய்த் […]
நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அம்பித் பாரத் ஸ்டேசன் என்ற திட்டத்தினை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை கோட்டத்தில் அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், தென்காசி, புனலூர், கோவில்பட்டி உள்பட 15 ரெயில் நிலையங்களை மேம்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறியப்பட்டு அவற்றை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரெயில் நிலையங்களில் கட்டிட வடிமைப்பு மற்றும் […]
:பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். கயத்தாறு சுங்கசாவடி பகுதியில் வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக மொத்தம் 1,000 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கோவில்பட்டி […]
கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கார்த்திகை செல்வி சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில், சண்முக நகர் மற்றும் பழந்தோட்ட நகர் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அந்த அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசனிடம், ரேஷன்கடை கட்ட நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். இந்த மனுவை […]







