1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
![1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது](https://tn96news.com/wp-content/uploads/2022/06/7120acc1-a8ca-451f-8514-65eaf97f42c4-850x560.jpg)
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (7.6.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இனாம்மணியாச்சி கல்லறைத் தோட்டம் அருகே இனாம்மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சுந்தரபாண்டியன் (வயது 33) என்பவர் பிடிபட்டார்.
அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே சுந்தரபாண்டியனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 480 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)