4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றம்; தூத்துக்குடி டாக்டர்கள் சாதனை

 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றம்; தூத்துக்குடி டாக்டர்கள் சாதனை

தூத்துக்குடியை சேர்ந்த 4 வயது குழந்தை இன்று காலை 8 மணியளவில் கழுத்துச் சங்கிலியில் இருந்த உலோக டாலரை தவறுதலாக விழுங்கிவிட்டது. அந்த டாலர் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டதுடன் மூச்சு விடுவதிலும் கஷ்டம் உண்டானது.


இதனால் அந்த குழந்தையை பெற்றோர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவா வந்தனர். எக்ஸ்ரே பரிசோதனையில், மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு அறிவுறுத்தலின் பேரில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிவசங்கரி, சந்தான கிருஷ்ணகுமார், ராபின் ரிச்சர்ட்ஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர் பலராமகிருஷ்ணன், சுகிர்த்ராஜ் ஆகியோர் அடங்கிய அவசரக் குழுவினர் குழந்தைக்கு முழு மயக்க மருந்து கொடுத்து உணவுக் குழாய் உள் நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் இருந்து உலோக டாலரை அகற்றினர்.

குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிக்கு இலவசமாக செய்யப்பட்டது.
சிறப்பாக பணியாற்றிய மருத்துவ குழுவினரை முதல்வர் டி.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை கண்காணிப்பாளர் குமரன், ஆர்.எம்.ஓ. சைலஸ் ஜெயமணி ஆகியோர் பாராட்டினர்.
அவர்கள் ஆலோசனையின் பெயரில் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். நேருவின் அறிவுறுத்தலின் படி, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். சிவசங்கரி, டாக்டர். சந்தானகிருஷ்ணகுமார், டாக்டர். ராபின் ரிச்சர்ட்ஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழு டாக்டர். பலராமகிருஷ்ணன், டாக்டர். சுகிர்த்ராஜ் ஆகியோர் அடங்கிய அவசரக் குழுவினர் குழந்தைக்கு முழு மயக்க மருந்து கொடுத்து உணவுக் குழாய் உள் நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் இருந்த உலோக டாலரை வெற்றிகரமாக அகற்றினர்.

இக்குழந்தை, தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வர் டி.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திரன், துணை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் மருத்துவ குழுவினரை பாராட்டினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *