• April 29, 2024

இலங்கை அரசு திவாலானதாக மத்திய வங்கி அறிவித்தது

 இலங்கை அரசு திவாலானதாக மத்திய வங்கி அறிவித்தது

இலங்கையில் பயிர் செய்வதற்கு உரம் இல்லை இதனால் நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது எனவே ஆகஸ்டு முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படக் கூடும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, அதன் வரலாற்றில் முதல் தடவையாக தனது கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என கூறி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து முக்கிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இன்றியமையாத, குறைந்து வரும் வெளிநாட்டு பண கையிருப்பை பாதுகாப்பதற்காக சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக இலங்கை கடந்த மாதம் கூறியது
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என மத்திய வங்கி கூறி உள்ளது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தெற்காசிய மத்திய வங்கியின் கவர்னர் , நாடு இப்போது “முன்கூட்டிய இயல்புநிலையில்” உள்ளது என கூறி உள்ளார். மத்திய வங்கியின் கவர்னர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியதாவது:-
இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் . தற்போது 30 சதவீதமாக காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது: கடன் மறுசீரமைப்பு இருக்கும் வரை, எங்களால் திருப்பிச் செலுத்த முடியாது. ” என்றும் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *