• May 10, 2024

Whatsapp குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம் – புதிய வசதி அறிமுகம்

 Whatsapp குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம் – புதிய வசதி அறிமுகம்

இந்திய யூசர்களுக்கு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. இதன்படி, வாட்ஸ் அப் யூசர்கள் இனி குரூப் கால் பேசும்போது 32 பேரை தொடர்பு கொள்ள முடியும். சோஷியல் ஆடியோ லே-அவுட், ஸ்பீக்கர் ஹைலைட், வேவ்ஃபார்ம்ஸ் போன்ற அம்சங்களுடன் புதிய அப்டேட் வருகிறது.

காண்டாக்ட்ஸ் மற்றும் குரூப்களுக்கு புதிய டிசைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி வாய்ஸ் மெசேஜ் பப்புள்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேலரியில் உங்களுக்கு பிடித்தமான மீடியாவை ஆக்சஸ் செய்யும் வசதியும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. ஒரே சமயத்தில் 32 பேரை தொடர்பு கொள்ளும் வசதியின் மூலமாக குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், நண்பர்கள், அலுவலகப் பணியாளர்கள் இடையிலான விவாதங்களை விரிவாக மேற்கொள்ள முடியும்.

வீடியோ கால் வசதியில்…

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாய்ஸ் கால்களை மேம்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், வீடியோ கால் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தொடக்கத்தில் வீடியோ காலில் 4 யூசர்கள் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 8ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த வரையறை தற்போது வரை மாற்றம் செய்யப்படவில்லை.

ஹெச்டி ஆடியோ குவாலிட்டி இலவசமாக..

வாட்ஸ் அப் வாய்ஸ் காலில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது ஹெச்டி ஆடியோ குவாலிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை மேற்கொள்ளும் முன்பாக ஃபோனில் நல்ல தரமான இன்டர்நெட் கனெக்‌ஷன் இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *