• May 20, 2024

டெலிகிராம் ஆப்பில் இந்த வசதிலாம் கூட இருக்கா! புதிய அப்டேட் அறிமுகம்..

 டெலிகிராம் ஆப்பில் இந்த வசதிலாம் கூட இருக்கா! புதிய அப்டேட் அறிமுகம்..

டெலிகிராம் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக எக்கச்சக்கமான புதிய அம்சங்களை தன் பிளாட்ஃபார்மிற்கு கொண்டு வந்துள்ளது. அவைகள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்களை கீழே பார்க்கலாம்.

கஸ்டம் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ்:

இப்போது நீங்கள் எந்தவொரு சவுண்ட்-ஐயும் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட் ஆக செட் செய்யலாம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சாட்டில் உள்ள ஒரு ஷார்ட் ஆடியோ ஃபைல் அல்லது வாய்ஸ் மெசேஜை உங்கள் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ் பட்டியலில் சேர்த்து, அதை தேர்வு செய்வது மட்டுமே. செட்டிங்ஸ் > நோட்டிஃபிக்கேஷன் அண்ட் சவுண்ட்ஸ் வழியாக இதை செய்யாலாம். நீங்கள் ஆட் செய்யும் டோன்கள் அளவில் 300 கேபி மற்றும் 5 வினாடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கஸ்டம் ம்யூட் ட்யூரேஷன்ஸ்:

டெலிகிராம் ஆப்பில் ஏற்கனவே 8 மணிநேரம் அல்லது 2 நாட்கள் என்கிற ம்யூட் ட்யூரேஷன்ஸ் அணுக கிடைக்கிறது. இப்போது நீங்கள்  தேவைக்கு ஏற்றபடி நோட்டிஃபிக்கேஷன்களை ம்யூட் செய்யலாம். ஆண்ட்ராய்டில், சாட் இன்ஃபோ பக்கத்தில் உள்ள ‘நோட்டிஃபிக்கேஷன்ஸ்’ என்பதை கிளிக் செய்யவும் அல்லது மெனு ஆண்ட்ராய்டு சென்று சாட் ஹெட்டரில் ம்யூட் என்பதை கிளிக் செய்யவும். ஐஓஎஸ்-இல் சாட் இன்ஃபோ பக்கத்தில் உள்ள ம்யூட் என்பதை கிளிக் செய்யவும்.

ப்ரொஃபைலில் ஆட்டோ டெலிட் மெனு:

இது ரகசியமான அல்லது ஒழுங்கீனமான சாட்கள் தானாக அழிந்து போகும்படி செய்யும் ஒரு அம்சம் ஆகும். இது 2 நாட்கள், 3 வாரங்கள், 4 மாதங்கள் மற்றும் பல நெகிழ்வான டைமர் செட்டிங்ஸ்-இன் கீழ் அணுக கிடைக்கிறது. சாட் இன்ஃபோ பக்கத்தில் உள்ள மெனு ஆண்ட்ராய்டு அல்லது மெனு ஐஓஎஸ்-இல் இருந்து இந்த அம்சத்தை நீங்கள் அணுகலாம்

ஃபார்வேட் மெசேஜ்களுக்கான ரிப்ளைஸ்:

இப்போது டெலிகிராம் யூசர்ர்கள் எந்தவொரு மெஸேஜையும் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய அதற்கு ரிப்ளை செய்யலாம். உங்கள் ரிப்ளையை ஒரு ப்ரிவியூ வடிவத்திலும் கூட நீங்கள் அனுப்பலாம், பெறுநர் அதை கிளிக் செய்யவும் ஒரிஜினல் மெசேஜ் காட்சிப்படுத்தப்படும்.

ஐஓஎஸ்-இல் மேம்படுத்தப்பட்ட மெசேஜ் டிரான்ஸ்லேஷன்:

உக்ரைனியன் போன்ற பல மொழிகளிலிருந்து சிறந்த தரமான மொழிபெயர்ப்புகளை ஆதரிக்க ஐஓஎஸ் டிவிஎஸ்களுக்கான ஆப்ஸ்-இன்-ஆப் டிரான்ஸ்லேஷன் அம்சம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செட்டிங்ஸ் வழியாக அணுக கிடைக்கும் எந்தவொரு மொழியையும் நீங்கள் சேர்க்கலாம் அல்லது விலக்கலாம்.

ஆண்ட்ராய்டில் மேம்படுத்தப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர்:

இப்போது டெலிகிராமின் மொபைல் ஆப்ஸில் உள்ள எந்தவொரு வீடியோவையும் பிக்சர்-இன்-பிக்ச்சரில் பார்க்க முடியும், அதாவது லைவ் ஸ்ட்ரீம்களை பார்த்து கொண்டே சாட் செய்யலாம்.

புதிய அனிமேஷன்கள் மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட இமோஜிக்கள்:

புதிய அம்சங்களுடன் சேர்த்து டெலிகிராம் ஆப்பில் புதிய அனிமேஷன்களும் சேர்க்கப்பட்டுள்ளன. உடன் டெலிகிராமில் மேலும் பல அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜிக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் வழியாக உங்கள் உணர்வுகளை அல்லது உங்கள் செயல்பாடுகளை நீண்ட மெசேஜ்களாக டைப் செய்யாமல், வெறுமனே ஒரு அனிமேஷன் அல்லது அனிமேட்டட் ஈமோஜி வழியாக வெளிப்படுத்தலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *