கோவில்பட்டி கோட்ட  அஞ்சலகங்களில் கங்கை புனித நீர் பாட்டில் விற்பனை

 கோவில்பட்டி கோட்ட  அஞ்சலகங்களில் கங்கை புனித நீர் பாட்டில் விற்பனை

கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தை அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலின் விலை ரூ.30 ஆகும். கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் அனைத்து தலைமை அஞ்சலகங்கள் (கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி) மற்றும் விளாத்திகுளம், எட்டயபுரம், செங்கோட்டை, ஆலங்குளம், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு தங்கள் அருகே உள்ள அஞ்சலகத்தை அணுகவும், 04632-221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது தேவையை தெரிவிக்கலாம்.

பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் தங்கள் ஊர் அஞ்சலகத்தில் கங்கை புனிதநீர் அடங்கிய பாட்டில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *