விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

 விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி மற்றும் கல்குமியில்   வீரபாண்டிய கட்டபொம்மனின் 266- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பிள்ளையார் நத்தம் சாலையில் இந்த போட்டியானது நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு  6 மைல் தூரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டு முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. 

போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30,க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன இப்போட்டியை பாஞ்சை வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக தலைவர் முருக பூபதி, செயலாளர் செந்தில், பொருளாளர் சவுந்தர், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் மற்றும் என்.வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லகுமார் ஆகியோர் கொடியசைத்து  தொடங்கி வைத்தனர்.

இரண்டாவது போட்டியாக பூஞ்சிட்டு  மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு 5 மைல் தூரம் வெற்றி  இலக்காக  நிர்ணயிக்கப்பட்டது. சாலையில் சீறிப்பாய்ந்த காளைகளை வழிநெடுகிலும்  கைதட்டி உற்சாகப்படுத்தி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மாட்டு வண்டி பந்தயத்தில்  வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டியினர் ரொக்கப்பரிசு மற்றும் சுழற் கோப்பை வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை  கிராம  தர்மகத்தாக்கள் முத்துக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *