முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி](https://tn96news.com/wp-content/uploads/2025/01/IMG_20250105_095703-850x560.png)
திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்,
இதை முன்னிட்டு, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். துர்கா ஸ்டாலின் உடனிருந்தார்.
கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். துர்கா ஸ்டாலினும் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கனிமொழி எம்.பி.யை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)