அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்ப்புலிகள் கட்சி மனு
கோவில்பட்டி, கயத்தாறு விளாத்திகுளம், உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்.. துணை செயலாளர் கணேசன், நிதி செயலாளர் ஜெயராம் என்ற மகிழ்வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளை வேந்தன், வெள்ளைச்சாமி, ஊடகப்பிரிவைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது :-
புதூர் ஊராட்சி ஒன்றியம் சுப்புலாபுரம் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை மீட்டு தர வேண்டும்., சுப்புலாபுரம் கிராம அருந்ததியர் மக்களுக்கு மகளிர் சுகாதார வளாகம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
மணியக்காரன்பட்டி, கோவில்பட்டி அருகே வில்லிசேரி, கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் அருந்ததிய சமுதாய மக்களுக்கு குடிநீர், சுடுகாடு எரிமேடை, வாறுகால் வசதி, சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். மணியக்காரன்பட்டி கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க
இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.