தூத்துக்குடி தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் 75வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.. பின்னர் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 65லட்சத்து 55ஆயிரத்து 936 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் […]
கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, தலைமைக் கழக பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி […]
இசை அமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி. கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பவதாரணி உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த மகள் பவதாரணி உடலை பார்த்து இளையராஜா கதறி அழுதார். தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு பவதாரணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வுக்கு பிறகு […]
கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அப்பனேரி மற்றும் மேலப்பட்டி விலக்கு பகுதியில் மொத்தம் நான்கு கடைகளில் நேற்று முன் தினம் நள்ளிரவுக்கு மேல் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது தெரிந்ததே…! அப்பனேரி ஜி வி என் கல்லூரி ரோட்டில் உள்ள ஆர். வி. எஸ். ஸ்டோர் கடையில் இரும்பு ஷட்டர் கதவை உடைத்து ரூ. 97 ஆயிரம்கொள்ளையடிக்கப்பட்டது. மேலப்பட்டி விலக்கு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மகிழ் பேஷன்ஸ் […]
மதிமுக பொதுசெயலாளர் வைகோ இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 வது பிறந்தநாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 1942 இல் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா ஊடகபிரிவு தலைவர் அம்மன் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக பா.ஜனதா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. ரெயில் படுக்கை வசதியோடு அயோத்தியில் போக்குவரத்து செலவு தங்குமிடம் சென்று வரும் வரை உணவு அனைத்தும் சேர்த்து திருநெல்வேலியில் இருந்து ரூ.3800 மதுரையில் இருந்து 3000 வீதம் வசூலிக்கப்படுகிறது. 29-1-2024 முதல் 29-02-2024 வரை தமிழகத்திலிருந்து 34 ரெயில்கள் அயோத்தி செல்கிறது பொதுமக்கள் அனைவரும் […]
அஞ்சல் துறையில் குழந்தைகள், முதியோர், பெண்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் குறிப்பாக பார்த பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் பெண்கள் மேன்மை சேமிப்பு பத்திரம் திட்டம் ஆகிய திட்டங்களில் சேர்ந்து பயன் பெறும் வகையில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் நேற்று தொடங்கப்பட்டன. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொது மக்கள் […]
,கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிப்படைந்த அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டிடங்களை மறு சீரமைக்க பல்வேறு தரப்பினரும் உதவுகரம் நீட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “தூத்துக்குடி இடுக்கண் களைவோம்” என்ற புதிய இணையத்தளம் மற்றும் அதற்கான இலட்சினை (Logo) வெளியீட்டு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மறு சீரமைப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 லட்சத்திற்கான காசோலையை தூத்துக்குடி […]
தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட்களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி […]
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோவில்பட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறார். அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் காமராஜர் சிலர் அருகே அமைக்கப்படும் மேடையில் இருந்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.







