• May 9, 2024

Month: November 2023

செய்திகள்

சாதிய தீண்டாமை வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:- நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது. இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. கஞ்சா போதையில் இருந்த […]

கோவில்பட்டி

ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பலகாரம் செய்ய தேவையான பொருட்களை மானிய விலையில் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி புறநகர் முத்தையாபுரம் 53வது வார்டு ரேஷன் கடை முன்பு ஜனநாயக மாத சங்க புறநகர செயலாளர் கண்ணகி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது. அதாவது எண்ணெய்க்கு பதிலாக  தண்ணீரை பயன்படுத்தி  பலகாரம் சுட்டு நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, கிளை தலைவர் வெள்ளையம்மாள், […]

கோவில்பட்டி

ஓடைப்பட்டி வன்னி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வன்னி விநாயகர் கோவிலில் இன்று மாலை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்திருந்தார்

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடு: மேற்கு போலீசுக்கு பாராட்டு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி கோவில்பட்டி பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காலை முதல் மாலை வரை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக இருந்தது. எனினும் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு எதுவும் இல்லை. இதே போல் நகர் முழுவதும் போக்குவரத்து சீராக இருந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த துணை கண்காணிப்பளர் வெங்கடேஷ், மேற்கு […]

தூத்துக்குடி

சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு பரிசுகள்; ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டத்தில்.ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியில் இன்று 1.11.23 நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  .கோ.லட்சுமிபதி கலந்து கொண்டார். சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கினார்..மேலும் நன்கு  செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவான குமாரபுரம் பரணி மகளிர் சுய உதவிக்கழுவிற்க்கு பரிசு வழங்கினார். கிராம சபையில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை அரங்கினை ஆட்சியர் .லட்சுமிபதி பார்வையிட்டார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை […]

தூத்துக்குடி

குறைதீர்க்கும் கூட்டம்: காவல் கண்காணிப்பாளரிடம் 63 பேர் மனு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று (1.11.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 8 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 55 மனுதாரர்கள் என மொத்தம் 63 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். […]

கோவில்பட்டி

ரூ.50 லட்சம் கரிமூட்டம், மழையில் சேதம்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.உதவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே. துரைசாமிபுரத்தில் லட்சுமணன் (வயது 57) இவர் மனைவி குட்டியம்மாள் இருவரும்  பல வருடங்களாக கரிமூட்டம் தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் வட்டிக்கு பணம் வாங்கியும் இவர் நகைகளை அடகு வைத்தும் அதிக முதலீடு செய்து விறகுகள் மற்றும் தூர் கட்டைகளை வாங்கி வந்து சில மாதங்களாக கரிமூட்டம் அமைத்து இருந்தார்களாம். கடந்த 29ஆம் தேதி காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்தது சில மணி நேரத்தில் 17 கரி மூட்ட குவியலும் […]

கோவில்பட்டி

தீபாவளி நாளில்  2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

வருகிற 12 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.  தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு அனுமதிக்கப்படுகிறது.  நீதிமன்ற உத்தரவுபடி, பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு […]