• May 20, 2024

Month: August 2023

தூத்துக்குடி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை; ஆட்சியர் அறிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்..* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  “தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.. 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு […]

செய்திகள்

கூட்டு சதி செய்து ரூ.10 லட்சம் வைரக்கற்கள் கொள்ளை; 3 பேர் கைது

மதுரை விரகனூர் மகாராஜா நகர் ஆசிரியர் குடியிருப்பில்  குடியிருந்து கொண்டு சிவகங்கை மாவட்டம் தத்தனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் அழகர் (வயது 42 ) இவர் முன்னாள் போலீஸ்காரர் ஆவார். கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு இவர் தனது  மனைவியின் நகைகளை அடகு வைத்து 9.23 கேரட் எடையுள்ள அலெக்ஸாண்ட்ரைட் வகை வைரக்கல் வாங்கி வைத்திருந்தார். அதன் மதிப்பு சுமார் 7.5 லட்சம் ஆகும். அதன்பின்பு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு 6.4 […]

செய்திகள்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி தேரோட்டம்

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கடந்த 24ம் தேதி திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 30ம் தேதி மாலை சவுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் சவுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தம்பதியர் கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு […]

செய்திகள்

தி. மு. க. ஆட்சி மீதான அதிருப்தியை திசை திருப்ப கொடநாடு விவகாரத்தை

சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- திரை மறைவில் சந்தித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இருவரும் பொதுவெளியில் சேர்ந்தாற் போல் காட்சியளிக்கதற்போதைய ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள். கழக அரசை புரட்சித்தலைவர் அம்மாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடியார் சிறப்பாக வழி நடத்திய நிலையிலே 9 மாதங்களில் அரசை கவிழ்க்கவேண்டும் என்று பகிரத முயற்சியில் திரை மறைவிலே இருவரும் சேர்ந்து அதனை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலையில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதி :

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பினால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த பஸ் நிலையத்தின் வெளியேயும் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதையும் அதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதையும் பார்த்து இருப்பீர்கள். கூடுதல் பஸ் நிலையம், நகருக்கு வெளியே  பை-பாஸ் சாலையில் உள்ளது. அங்கிருந்து அண்ணா பஸ் நிலையத்துக்கு பஸ் விடப்படும் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறையில் அது இல்லை. மேலும் இரவு நேரங்களில் நீண்ட தூர வெளியூர் பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்துக்குவருவதில்லை. […]

ஆன்மிகம்

இன்று ஆடி மாத பவுர்ணமி

ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இன்று  ஆடிச் செவ்வாய். கூடவே சேர்ந்து பவுர்ணமியும் வந்திருக்கின்றது. அது மட்டும் மட்டுமல்லாமல் ஆங்கில மாதத்தில் இன்று  முதல் நாள் தொடங்கி  இருக்கின்றது. சொல்லவா வேண்டும். நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த நன்னாளில் அம்மனை வழிபாடு செய்தால், அளவில்லா ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.  வாழ்க்கையில் அசுர வளர்ச்சியோடு முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று அம்பாள் வழிபாட்டை தவற விடாதீங்க. இன்றைய தினம் பவுர்ணமி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று 4 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது

தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு மைசூர் புறப்பட்டு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(செவ்வாய்கிழமை) தூத்துக்குடியில் இருந்து 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ள்ளது. இணை ரெயில் தாமதமான காரணத்தால் தூத்துக்குடி-மைசூர் விரைவு ரெயில்(16235) மாலை 5.15 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கு மைசூர் புறப்படும். பயணிகள் இதற்கு ஏற்றவாறு பயணத்தை ஏற்பாடு செய்து கொள்ளும்படி ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது,

ஆன்மிகம்

தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கடலுக்குள் தெரியும் சிவன் கோவில்

  குஜராத் மாநிலத்திலுள்ள சிவன் கோவில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! இந்த கோவில் குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் கடலில் மூழ்கியே  காணப்படும். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே இக்கோவில் உள்ளது.இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கோவில் கடலுக்குள் மறைந்திருக்கும்.பின்னர், கடல் […]

செய்திகள்

பாரதிராஜாவிடம் உடல்நலம் விசாரித்து பாட்டு பாடிய வைரமுத்து

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது  பாடல் பாடி உற்சாகமூட்டினார். 1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

தாய்ப்பாலின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரைஉலக தாய்ப்பால் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடத்தின் மையக் கருத்து தாய்ப்பால் ஊட்டுதலை செயல்படுத்துதல், பணிபுரியும் பெற்றோர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் முன்னிலை […]