• May 20, 2024

Month: September 2022

கோவில்பட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றால் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா? கடம்பூர் ராஜூ அதிரடி

அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில்பட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-அ.தி.மு.க நம்பர் 1 இயக்கமாக விளங்குகிறது. வெற்றி தோல்வி பழகிப்போன ஒன்று. எனவே அ,தி.மு.க.தொண்டர்கள் கட்சியை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டார்கள். இவ்வளவு ஆணித்தரமாக 1௦௦ சதவீதம் இருப்பார்கள்.கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களில் சிலர் அங்குமிங்கும் அணி மாறலாம். ஆனால் ஆணிவேராக, அச்சாணியாக தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது,.ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே எடப்பாடி பழனிசாமி தான். மடியில் […]

கோவில்பட்டி

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு: கோவில்பட்டியில் இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் […]

செய்திகள்

காலில் செய்த அறுவை சிகிச்சை மறைப்பு: திருமண மேடையில் மணமகனை உதறித்தள்ளிய மணப்பெண்

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த 32 வயதான பனியன் நிறுவன ஊழியருக்கும், 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இதையடுத்து இரு வீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வந்தனர். நேற்று காலை பூலுவப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் சம்பிரதாயப்படி கோவிலில் பூஜை செய்து, ஒருவொருக்கொருவர் மாலை மாற்றி பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.இதன் பின்பு அதே பகுதியில் உள்ள தனியார் […]

கோவில்பட்டி

சாலை அமைக்கும் பணிக்கு கரிசல் மண் பயன்படுத்துவதா? விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா குமாரரெட்டியாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெயிலுகந்தபுரம் முதல் கழுகுமலை வரை உள்ள வண்டிபாதையை 3 அடி உயர்த்தும் பணி நடக்கிறது. வண்டிப்பாதையின் இரு புறமும் உள்ள பகுதியில் இருந்து சுமார் 4 அடி முதல் 6 அடி வரை மண் எடுத்து, வண்டி பாதையை 2 அடி முதல் 3 அடி வரை கரிசல் மண் போட்டு உயர்த்தி உள்ளார்கள்.இது இரண்டு மழைக்கு கூட தாங்காது. இந்த லேயரை செம்மண் கொண்டும் சரளை […]

செய்திகள்

ஒற்றைத் தலைமை என்ற அ.தி.மு.க.வின் நோக்கம் ஏற்பு- எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது:-அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது.இதன்படி, ஒற்றைத் தலைமை என்ற அ.தி.மு.க.வின் நோக்கம், உள்ளிட்ட முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதுதான் தொண்டர்களின் விருப்பம், சட்டப்படி […]

செய்திகள்

அ.தி.மு.க.பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து; எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக

.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் […]

செய்திகள்

மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்

கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் ஸ்ரீநிதி – கவுசிக் தேவ் ஆகியோருக்கு மாலை எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தினார்.பின்னர் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-மணமக்களை வாழ்த்த வாய்ப்பு கிடைத்தற்க்கு நன்றி. கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தைக் தலைமையேற்றி நடத்தி வைத்திருப்பார். இந்த மாவட்டத்தை கம்பீரமாக மாற்றிய பெருமை பொங்கலூர் பழனிச்சாமிக்கு உண்டு. சட்டமன்ற உறுப்பினர் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் தேர்வு

முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருசெந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் திகழ்கிறது. உலக புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது..மாப்பிள்ளையூரணி, இந்திரா நகரைச் சேர்ந்த வி.செந்தில் முருகன், திருச்செந்தூர் மானாடு தண்டுபத்து, மேற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், வடக்கு ஆத்தூர் கீழமுத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ், சென்னை சாந்தோம், சல்லிவன் தெருவை சேர்ந்த இரா.அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையை […]

செய்திகள்

சீனாவில் இருந்து இந்திய தேசிய கொடிகள் இறக்குமதி செய்தது வேதனைக்குரியது- சபாநாயகர் அப்பாவு

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர்.காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக […]

தூத்துக்குடி

வெளி மாவட்ட வியாபாரிகளிடம் இயற்கை உரம் வாங்கவேண்டாம்; வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது;-தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு, புதூா் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 1.60 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடி பணிக்கான ஆயத்தப் பணிகளை தொடக்கி உள்ளனா்.இந்த தருணத்தை பயன்படுத்தி வெளி மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் இயற்கை உரம் (ஆா்கானிக் உரங்கள்) என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவா்களின் தோட்டங்களுக்கே கொண்டு சென்று உரங்களை விற்று […]