தூத்துக்குடியில் 13௦மீன்பிடி படகுகள் இன்று அதிகாலை கடலுக்கு சென்றன

 தூத்துக்குடியில் 13௦மீன்பிடி  படகுகள் இன்று அதிகாலை கடலுக்கு சென்றன

கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக மீனவர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும், பட்டாசுகள் வெடித்தனர். 2 மாதத்திற்கு பின்பு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் செல்வதை பார்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் வந்திருந்தனர்.

மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 262 பதிவு செய்யப்பட்ட படகுகள் உள்ள நிலையில் மீன்பிடி விசைப்படகு சங்கத்தினர் 61 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்வதால் மீன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி 130 விசைப்படகுகள் இன்றும், 132 விசைப்படகுகள் நாளையும் கடலுக்கு செல்கின்றன.
அதன்படி இன்று அதிகாலை 13௦ படகுகள் கடலுக்கு சென்றுள்ளன. இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மீன்பிடி படகுகள் திரும்பி வரக்கூடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *