• May 12, 2024

30 நிமிடம் ‘தூங்கும் இடைவேளை’ அறிவித்த நிறுவனம்

 30 நிமிடம் ‘தூங்கும் இடைவேளை’ அறிவித்த நிறுவனம்

பெங்களூருவை சேர்ந்த ‘வேக் பிட்’ என்ற தலையணை, மெத்தை தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 30 நிமிடம் தூங்கும் இடைவேளையை அறிவித்துள்ளது. இதன்படி ஊழியர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அலுவலகத்தில் தூங்கிகொள்ளலாம். இதற்காக வசதியான படுக்கைகளும், சத்தமில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சைதன்யா ராமலிங்ககவுடா கூறுகையில், “மதிய நேரத்தில் தூங்குவது நமது ஞாபக சக்தி, படைப்பாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும். நாசாவின் ஆய்வு ஒன்றில் 26 நிமிட தூக்கம் நமது உழைப்பாற்றலை 33 சதவீதம் அதிகரிப்பதாக கூறுகிறது. ஹார்வேர்ட் ஆய்வு ஒன்று மதிய தூக்கம் நமக்கு ஏற்படும் சோர்வை தடுப்பதாக கூறுகிறது. இதனால் அனைவருக்கும் தூங்கும் இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *