”தமிழில் தான் நான் பேசுவேன்”: புஷ்பா-2 புரோமோஷனில் அல்லு அர்ஜீன் பேச்சு
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படமாக இருக்கிறது புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜீன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படமானது டிசம்பர் 5-ம் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் புஷ்பா 2 படத்தின் புரோமோஷன் நடந்தது. இதில் கிஸ்ஸிக் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. புரோமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜீன் நான் ஒரு பக்கா சென்னை பையன். நான் நேஷனல், இன்டர்நேஷனல் என எங்கு சென்றாலும் சென்னை தான் எனது வேர். இங்கு தான் எனது முதல் 20 வருடங்கள் கழிந்தன. அதனால் இந்த ஊர் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் தான். நான் ஒரு பக்காவான சென்னை பையன். எனது நண்பர்களுடன் அமர்ந்து பேசும் போது லோக்கல் சென்னை பாசையெல்லாம் பேசுவேன். என்றார்.
அப்போது அவரிடம் அங்கிருந்த தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அல்லு அர்ஜீன், ’நான் தமிழில் தான் பேசுவேன். அது இந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை’ என்று குறிப்பிட்டார். அல்லு அர்ஜீன் சென்னையில் தான் பள்ளி படிப்பை படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜீன் தமிழ் மண்ணுக்கு மரியாதை செய்வேன் என்று கூறியதை தமிழ் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.