• November 16, 2024

ஸ்டெர்லைட் தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிய மனு: சுப்ரீம்கோர்ட் நிராகரிப்பு

 ஸ்டெர்லைட் தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிய மனு: சுப்ரீம்கோர்ட் நிராகரிப்பு

வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி தாமிர ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விஷயத்தில் நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றவில்லை என்றும் தமிழ்நாடு அரசும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் குற்றம் சாட்டி ஆலையை மூட உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டது. எனினும், மாநில அரசின் முடிவை 2018-ல் சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.
இதையடுத்து, ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் கடந்த 2020-ல் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது.

இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது.

அதில், ஒரு தொழில்துறையை மூடுவது ஒரு முதல் தேர்வு அல்ல. ஆனால் வேதாந்தாவின் கடுமையான மீறல்களுடன் நீண்ட மற்றும் தொடர்ச்சியான மீறல்கள் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு., ஐகோர்ட்டையும், சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது.

இந்த ஆலை நாட்டின் தாமிர உற்பத்திக்கு பங்களித்துள்ளது. அப்பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனாலும், நிலையான வளர்ச்சி, பொது நம்பிக்கை மற்றும் மாசுபடுத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது. அவர்களின் கவலைகளை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது’ என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *