• April 29, 2024

ராகுல்காந்தி நெல்லை கூட்டத்தில் நாளை  பேசுகிறார்; கோவையில் மு.க.ஸ்டாலினுடன்  பிரசாரம்  

 ராகுல்காந்தி நெல்லை கூட்டத்தில் நாளை  பேசுகிறார்; கோவையில் மு.க.ஸ்டாலினுடன்  பிரசாரம்  

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் அணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தலும் இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அகில இந்திய தலைவர்கள் வருகை அதிகரித்து உள்ளது.

அந்த வகையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல்காந்தி நாளை  (வெள்ளிகிழமை) தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ராகுல்காந்தி பிற்பகலில் ஹெலிஹாப்டர் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

பாளையங்கோட்டை புனித யோவான் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறது. அங்கிருந்து போதுக்கூட்டம் நடக்கும்  நடக்கும்  பெல் பள்ளிக்கூட மைதானம் செல்கிறார், அங்கு நடக்கும் பிரசார கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, ராஜபாளையம்க் மற்றும் மதுரை ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வாக்கு சேகரிக்கிறார்,.

கோவையில் ஸ்டாலினுடன்…..

இந்த கூட்ட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. அதன்பிறகு ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொள்கிறார்.

கோவை கூட்டத்தில் கோவை உள்பட பல்வேறு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.இந்த கூட்டம் மாலை  6.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு முடியும். தொடர்ந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *