18 வயது பூர்த்தி அடையாத மகனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த தந்தைக்கு ரூ.26 ஆயிரம் அபராதம்
![18 வயது பூர்த்தி அடையாத மகனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த தந்தைக்கு ரூ.26 ஆயிரம் அபராதம்](https://tn96news.com/wp-content/uploads/2024/04/valakupathivu.jpg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசார், 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் ஓட்ட மோட்டார் சைக்கிள் கொடுத்த தந்தை காசிம் என்பவர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் இராம.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காசிம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட காசிமுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் , இருசக்கர வாகனத்தின் பதிவை ஒரு வருடத்துக்கு நிறுத்து வைத்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின்படி அபராத தொகையை காசிம் செலுத்தி விட்டார். அவரது வாகனத்தின் பதிவை ஒரு வருடத்துக்கு நிறுத்தி வைக்க மோட்டார் வாகன சட்டப்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)