பொறியாளர் பணிக்கான போட்டி தேர்வு; கோவில்பட்டியில் 2 நாட்கள் நடக்கிறது
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு 6 .1.2024 மற்றும் 7.1.2024 ஆகிய 2 நாட்கள் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வு மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று காலை 9 மணிக்குள் வரும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே குறித்த நேரத்தில் பயண தூரத்தை கணக்கிட்டு வரும்படியும் தூத்துக்குடியில் இருந்தும் கோவில்பட்டியில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் மற்றும் வழக்கமான பேருந்துகள் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளும்படியும் இந்த பொது அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகள் மைய கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவில்பட்டி வட்டாட்சியர் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.