• May 21, 2024

Month: April 2024

தூத்துக்குடி

தூத்துக்குடிதொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு 13-ந் தேதி வரை வழங்கப்படும்; ஆட்சியர் லட்சுமிபதி

தூத்துக்குடி தொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. 13-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான  கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடும் பணி 28.3.2024 அன்று தொடங்கப்பட்டு, 30.3.2024 அன்3று அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்காளர் பயன்படுத்தும் சீட்டு ஆனது 1.4.2024 அன்று முதல் தூத்துக்குடி பாராளுமன்றத் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள்-சின்னங்கள்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. இதில் அரசியல் கட்சியினரிடம் இருந்து கைநழுவி போன சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டனர். தற்போது அந்த சின்னம் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு […]

கோவில்பட்டி

ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 43). மதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஆகியோர்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வீட்டை பூட்டிவிட்டு, திருநெல்வேலி சென்றனர்.  இரவில் அவர்கள் வீடு திரும்பிய போது  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ மற்றும் அலமாரி திறந்து கிடந்தது. அதனுள் இருந்த சதீஷ்குமாருக்கு […]

தூத்துக்குடி

தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: கஞ்சா கடத்திய 6 பேர் சிக்கினர்  

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கடலோர சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அந்தோணி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற காரின், நம்பர் பிளேட்டில் அரசு வாகனம் என்று எழுதப்பட்டு இருந்தது. காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். கார் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 டிராவல் பேக்குகளில் மொத்தம் 20 கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது […]